Header Ads



அலரியில் வைத்து, மகிந்தவை ஹிண்டலடித்த ரஞ்சன் - விழுந்துவிழுந்து சிரித்த ரணில்

எத்தனோல் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு வரிச் சலுகை இல்லாத எந்தவொரு வரவு செலவுத்திட்டமும் மஹிந்த ராஜபக்ஷவிற்குப் பிடிக்காது என்று ரஞ்சன் ராமநாயக்க கிண்டலடித்துள்ளார்.

கடந்த வாரம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களின் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத்திட்டத்தை விமர்சிப்பது குறித்தும், ஒன்றுமில்லாத வெறும் வரவு செலவுத்திட்டம் என்று வர்ணித்திருப்பது குறித்தும் உரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மஹிந்தவுக்கு எத்தனோல் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டால் தான் அவருக்கு வரவு செலவுத்திட்டம் சுவைமிக்கதாக இருக்கும். இல்லாவிட்டால் வெறுமையாகத்தான் தோன்றும் என்று கிண்டலடித்துள்ளார்.

இதனைக் கேட்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

3 comments:

  1. தலைப்பு மாற்றம் தேவை : ஹிண்டல் அல்ல, கிண்டல்.

    ReplyDelete
  2. thamil moliye oru kindal thaane. edaythaan sariya eluda mudiyum? solluwaarhal 240 mela eluththukkal irukku endru.aanaal thewayaana eluththukkal illa. That's y v use english thamul

    ReplyDelete
  3. Pala thadavaigal ippadippatta pilaigalai naan suttik kaattiyirukkiren . Yaarume
    alattikkolvazaaga theryavillai. Kavanak kuraivinaal etpaduginra pilaigal . nalla akkarai
    kaattinaal thiruththik kollalaam .

    ReplyDelete

Powered by Blogger.