Header Ads



கனடாவுடன் பழைய உறவை ஞாபகப்படுத்திய மைத்திரி, இளைஞர்களின் விருதும் பெற்றார் (படங்கள்)

மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கனேடிய மற்றும் அவுஸ்திரேலிய தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடின் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற பொது தேர்தலிகளில் பெற்ற வெற்றிகளுக்கு ஜனாதிபதி தமது வாழ்த்தினை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, முன்னாள் கனேடிய பிரதமருடன் இலங்கை மிக நெருக்கமான உறவை வைத்திருந்ததனை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அது தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் கனேடிய பிரதமரின் புதல்வரே தற்போது கனடாவின் பிரதமராக தெரிவாகியுள்ளார்.

இது தவிர, பல தலைவர்களையும் மோட்டாவில் சந்தித்த ஜனாதிபதி, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சமூதாயத்திற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்காகவும் பங்களிப்புக்காகவும் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சம்மேளனத்தினால் ஜனாதிபதி அவர்களை கௌரவிப்பதற்கான விருது வழங்கப்பட்டது.

இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் அஹமட் அடமு (Ahamed Adamu) அவர்களால் நேற்று (28) மோல்டாவில் ஜனாதிபதி அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இதன்போது பொதுநலவாய இளைஞர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஷிரோமி வத்சலா சமரக்கோன், தாரிக்கா திலீபனி, மொஹமட் ஹூஸ்னி (mohomed Husni) ஆகியோருடன் பலரும் இணைந்திருந்தனர்


No comments

Powered by Blogger.