Header Ads



இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களை அவமதித்தமை - கல்வியமைச்சரிடம் சீறிய றிசாத்

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது,

பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு, முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். 

இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவேதான் கல்வியமைச்சரிடம் இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.

இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது.

இதுகுறித்து கல்வியமைச்சு மாத்திரமின்றி, வடமாகாண சபையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். வடமாகாண சபையின் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் தொடர்பில் முஸ்லிம்களிடம் ஏற்கனவே நியாயபூர்வ சந்தேகம் உள்ளது. இந்திலையில் பரீட்சை வினாத்தாளில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களின் மனதை புண்படுத்தப்பட்டுள்ளமை குறித்து வடமாகாண சபையும் அவதானம் செலுத்த வேண்டுமென்றார்.

21 comments:

  1. என்ன தவறு நடந்துள்ளது என்பதையும் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லா விட்டால் இதற்கும் எம்மை போன்றவர்களுக்கு அரசியல் சாயம் பூச வழி வகுத்து விடும்.

    ReplyDelete
  2. Dear minister
    Don't give up this matter.we are no more a minority under ltte terrorist. I strongly believe they're did purposely.they will never change..infact they want to start terrorism again.we have to fight strongly this time.

    ReplyDelete
  3. மற்றைய முஸ்லிம் பெயர் தாங்கி அமைச்சர்கள் எங்கே போனார்கள் அறிக்கை தயாரித்து இன்னும் முடியவில்லைபோலும் இந்த மந்தம் பிடித்த அரசியல்வாதிகளின் அலட்சிய போக்காலேயே இந்த இனவாதிகள் இந்தளவு முஸ்லிம்களுக்கு பிரச்சினையை ஏற்ப்படுத்தி வருகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Enna mosamairukkanuhal intha muslim thalaiverhal entru sollithirifaverhal

      Delete
  4. சுவாசிக்க மறந்தாலும் உச்சரிக்க மறக்காத மாநபியின் பெயரைக் கொச்சைப்படுத்தி வம்புக்கு இழுக்கும் கும்பல் தொழிலையே செய்து வரும் காடையர் கூட்டத்திட்கெதிராக உறையிலிருந்த போர்வாளாய் சீறிப்பாயும் உங்களுக்கு வாசகர் சார்பாக நன்றிகள்.
    சட்டத்தின்முன் நிறுத்தும் வரை தொடர்ந்தும் அவதானத்தோடு இருப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  5. Shafraz Khan you are not serious,are you ? Minister says its a crime which is unforgivable. Doesn't he know which sin unforgivable in front of allah ??? Is he trying to change Islam ??? Don't make these things way too serious. During prophets people insulted him more than this. If you try to press on this matter too much too many others will do the same thing.
    That's exactly what happened prophets cartoon pic. Now it's every where on the net. In YouTube people use it as display pic. So concentrate on how prophet lived and asked us to live. Not in these matters and don't make it even worse.

    ReplyDelete
    Replies
    1. I know what I wrote . don't teach me on this.who are you and for whom you represent. It's serious for muslims calling prophet a fox .don't support ltte..they are worst terrorist in the world.

      Delete
  6. மக்கள் தலைவன் றிஷாத் பதியுதீனின் படத்தை கண்டாலே ஆக்கத்தின் தலைப்பு என்னவென்றே உங்களுக்கு புரிவதில்லை. ரிஷாட்டின் மீதுள்ள தனிப்பட்ட பொறாமையும் காழ்ப்புணர்ச்சியுமே அவருக்கெதிரான உங்களது விமர்சனத்திற்கு காரணம். உங்களைபோன்ற கிழமைக்கொருமுறை மாத்திரம் வேப்தலத்தில் தோன்றிமறையும் சுண்டெலிகளுக்கு முஸ்ல்ம்களின் பிரச்சினை என்றால் கட்டுரையின் தலைப்பு என்னவென்று வினாதொடுக்கிரீர்கள்.உங்களுக்கு விடயளிப்பதட்கு ஜப்னா இணையம் உங்கள் சேவகன் அல்ல.வேரெங்கவது வேஷைத்தலமொன்றுக்கு சென்று வினாத்தொடுங்கள்.
    தலைவன் ரிஷாதின் வீரமும் துணிச்சலும் முஸ்லிம்களுக்கெதிரான கடையர் கூட்டத்தினை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை ஓயாது என்பதனை குருவியாரே கருத்திட் கொள்ளவும்.

    ReplyDelete
  7. முஸ்லிம்கள் மீதான் தெற்கின் இனவாதமும், மதவாதமும் திடீரெனெ பற்றியெரிந்து தற்போது அணைந்து கொண்டிருக்கிறது!
    அது அப்பகுதி பெரும்பாலான பொதுமக்களின் புரிந்துணர்வினால்!

    ஆனால், வடக்கு, கிழக்கிலோ அன்றிலிருந்து இன்றுவரை அடிக்கடி சிறிதாகவும், பெரிதாகவும், பற்றிக்கொண்டே இருக்கிறது... காரணம் இப்பகுதி பெரும்பாலான பொதுமக்களின் ஆதரவு இருப்பதனால்!

    ReplyDelete
  8. இதிலே இனவாதம் கதைத்து உங்களது சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்...
    உண்மையில் அச்சுப்பிழைகள் என்பது சகயமானது, ஆனால் சரிபார்க்கப்பட்ட பின்பும் அவ்வாறு இருப்பது கண்டிக்கப்பட வேண்டியது... ஆனால் குறித்த பாடம் இஸ்லாம் சமயமாகும். ஒருமுறை சரிபார்க்கப்பட்ட பின்னரே அதில் உள்ள தவறுகள் திருத்தப்படும். நடந்தது இதுதான், இங்கே சரி பார்ப்பவர்கள் குறித்த பாடத்தில் நிபுணத்துவம் உள்ள ஆசிரியர்தான். இந்துநாகரிக ஆசிரியரோ அல்லது கிறிஸ்தவ நாகரிக ஆசிரியரோ சரி பார்க்கவில்லை. எனவே குறித்த ஆசிரியரே இதற்க்கு பதில் கூறவேண்டியவராவர். அதை விட்டு குய்யோ கையோ என்று எடுத்ததற்க்கெல்லாம் அடுத்தவன் தான் செய்தது பிழை என்று கூறுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

    முஸ்லிம்கள் தமிழ் பேசும்போது அதில் ஆயிரம் உச்சரிப்பு பிழைகள் இருக்கும்போது, தவறுதலாக அதுவும் ஒரு இஸ்லாம் பாடத்தில் இஸ்லாமிய ஆசிரியரின் மேற்ப்பார்வையில் ஏற்ப்பட்ட குறைகளுக்கு எடுத்த எடுப்பிலே மற்றவர்கள் மீது குறை கூறுவது நல்லதல்ல. இங்கே தமிழிலே எத்தனை பேர் எழுத்துப் பிழையின்றி எழுதியுள்ளீர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம். நான் ஒரு இந்துதான் ஆனால் மனிதர்களால் விடப்படும் தவறுகளை பொறுத்துக்கொள்ள தெரிந்தவன். நீங்கள் , இஸ்லாமியர்கள் உங்கள் மார்க்கம் விதந்துரைத்த விதிப்படி வாழப்பழகுங்கள். அதுவே ஒரு பிரச்சினயுமின்றி நாம் அனைவரும் சந்தோசமாக வாழ அடிப்படையாக இருக்கும். இதில் மனம் நோகும்படி எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. சஜந்தனின் கருத்துக்களுக்கு நன்றி நீங்கள் இதயச்சுத்தியூடன் சிந்தியூங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த நபருக்காவது நபிக்கும் நரிக்கும் மாறுபாடு வருமா? அல்லது அது கீபோட்டில் அருகில் உள்ளதா? அல்லது கெபிடல் ஆகும் போது மாறுமா? இது சரிபார்க்கப்பட்ட பின்னர் செய்யப்பட்ட வம்பான வேலை என்பது புரிவில்லையா? முஸ்லிம்கள் தமிழ் போசும் போது மட்டும்தான் பிழை ஏற்படுகின்றதா? மழையகத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், இதில் எது தமிழ் சொல்லுங்கள் பார்க்கலாம் உச்சரிப்பைக் காட்டி கொச்சைப்படுத்தலை மறைக்க வேண்டாம் நாமும் தமிழ் நண்பர்களுடன் நன்றாகத்தான் உள்ளோம் உலகமே அறிந்திருக்கும் வசனங்களில் அதிலும் கீபோட்டிலோ கெபிடலிலோ சம்பந்தமில்லாத பல இடங்களில் வருவதை தவறு என்பதா? நையாண்டி என்பதா?

    ReplyDelete
  10. அன்புள்ள ஜிப்ப்ரி அவர்களே,

    உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகத் தெரிகின்றது. நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் நிச்சயமாக கவலைப்பட்டிருப்பேன். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மத நம்பிக்கைகளின்படி வாழவும் பின்பற்றவும் எவ்வளவு சுதந்திரம் இருக்கின்றதோ அதனைவிடவும் அந்நம்பிக்கைகள் அவமதிக்கப்படுகையில் நாம் அதனை கண்டிப்பதற்கு அதிக சுதந்திரத்தை கொண்டிருப்போம். ஆனால் தமிழ் முஸ்லிம் நம்பிக்கையை கட்டி எழுப்புவது அரசியல்வாதிகளுக்கு அப்பால் தனிமனிதர்களாலே அவை இலகுவில் முடியும். அவ்வாறு இருக்கையில் நடந்த சம்பவம் தொடர்பாக தீர விசாரித்து அதன்படி இழைக்கப்பட்டது தவறு என்றால் நிச்சயமாக மத அவமதிப்பு குற்றத்திற்கு அவரை ஆளாக்கலாம்.

    அதைவிடுத்து இங்கே அதுவும் ஒரு செய்தி தளத்திலே பலரும் இனவெறுப்பு கருத்துக்களை பரப்பவிடுவது கவலையாக இருக்கின்றது. நான் கூறியதுபோல ஒருவிடயத்தை முழுமையாக அறியாமல் அடுத்த இன மதத்தவரை குற்றம்சாட்ட வேண்டாம் என்ற தொனிப்பொருளில் எழுதினேனே தவிர நிச்சயமாக யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் அல்ல.

    ஒருத்தி / ஒருவன் ஒற்றைக்கண் பிடுங்கப்பட்டு வரும்போது உணர்ச்சிவசப்பட்டு தீர்ப்பு கொடுக்க வேண்டாம் ஏனெனில் மற்றைய நபரின் இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டு இருக்கலாம், என்று உங்களது மார்க்க நியம விழுமியங்கள் கூறுவதை மறைந்துவிட்டா பலரும் இங்கே பதிவிடுகின்றார்கள் என்ற சந்தேகம் வருகின்றது.

    எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களும் இருக்கின்றார்கள் முஸ்லிம் நண்பர்களும் இருக்கின்றார்கள். இரண்டிற்கும் இடைப்பட்ட வித்தியாசமும் எனக்கு தெரியும். குறிப்பாக எனது மிக மிக நெருங்கிய நண்பர்கள் சாதாரண முஸ்லிம் என்று கருதும் நண்பர்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்களிடம் நல்ல மனமும் பழக்கவழக்கமும் இருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக முஸ்லிம் என்று தம்மைத்தாமே அடையாளப்படுத்தும் மக்களிடத்தில் ஐந்து சதவீதத்தினர் கூட உண்மையான முஸ்லிமாக இருப்பதில்லை.

    நான் இதனைக் கூறியது உங்கள் யாரையும் மனம் நோகடிக்கவில்லை. சகோதர இன மக்களைப்பற்றிய பொதுமைப்படுத்தப்பட்ட இன மத அடையாளங்களைப் புண்படுத்தக்கூடிய கருத்துக்களை சமூக வலைத்தள பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டாம் என்பதே என் விருப்பம். இதனால் நண்பர்களாக இருக்கின்றவர்கள் மன நிலையிலும் மற்றவர்களைப்பற்றிய தப்பெண்ணம் உருவாகி அது உண்மையான நட்ட்ப்புக்களை பிரித்துவிடும். இதனால் உண்மையான இன நல்லிணக்கம் என்பது ஒருபோதுமே கைகூடாது.

    என்னிடம் மாற்று இன சகோதரர்கள் பற்றி எனது இனத்தில் உள்ள நண்பர்கள் எழுந்தமானமாக கதைக்கின்ற பல சந்தர்ப்பங்களில் நான் அவற்றை மறுதலித்து அத்தகைய வாதங்கள் பிற்போக்குத்தனமானவை என்றும் அவை தத்தமது அரசியல் நலன்களுக்காக அரசியல்வாதிகளால் செய்யப்பட்ட வியாபாரக் கருத்துக்கள் என்பதையும் கூறி அவர்களுக்கு சிங்கள முஸ்லிம் மக்களைப் பற்றிய தப்பெண்ணங்களை மாற்றும்படி கேட்டு இருக்கின்றேன். இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் நிச்சயமாக் மாற்று மத இன மக்களுடன் இதயசுத்தியுடன் பழகும் எவனும் இவ்வாறான கருத்துக்களை நம்பமாட்டார்கள். உண்மையில் ஒவ்வொரு இனத்திற்குள்ளும் தீவிர இனப்பற்று உள்ளவர்கள் இருப்பார்கள். அதை தவறு என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள்கூட பன்மைப்பட்ட சமூகத்துள் வாழ்ந்து பார்த்தால் தமது இனத்திற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பார்களே தவிர மற்றைய இனத்திற்கு ஆபத்தாய் இருக்க மாட்டார்கள். நான் ஒரு இந்து மதத்தவன், தமிழன் ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலால் மனிதன். அவ்வாறு எல்லோரும் சிந்தித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் இந்த உலகம்....

    நான் கூறவந்த கருத்துக்களை புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. @sajanthan today only I got a chance to read your comment. I am amazed and humbled and I wish if our Muslim brothers also can think like you.
      May allah give the right path for you and me before we die.

      Delete
  11. அன்புள்ள சஜந்தன்,

    உங்கள் கருத்துக்கள் வரவேற்கக்கூடியவை. உங்கள் செயற்பாடும் பாராட்டத்தக்கது. ஆனால், நடைமுறையில் உங்களைப்போன்று நடுநிலையாக நின்று சிந்தித்து செயற்படுபவர்கள் உங்கள் தமிழ் சமூகத்தில் மிகக்குறைவு. அதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்காது, காரணம் இப்போதும் நீங்கள் நடுநிலையோடு உண்மையை ஏற்கத் தயாரானால் உங்கள் மனட்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள். நானும் உதாரணத்திற்கு மிக அண்மையில் நடந்த, எல்லோரும் அறிந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

    புலிகளினால் முழுவதும் பறிக்கப்பட்டு விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் பற்றி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் "இது ஒரு இனச்சுத்திகரிப்பு" என்றும், இதற்கு ஒவ்வொரு தமிழனும் பொறுப்புக்கூறவேண்டும், குறைந்தது ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் கூறியதற்கு அவருக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழர், தமிழ் பொதுமக்கள் என எல்லாருமே எதிர்ப்பு தெரிவித்தார்களே தவிர யாரும் உண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    அது மாத்திரமல்ல, தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மிக அநேகமான தமிழ் அரச அதிகாரிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் மிகவும் பாரபட்சமாகவே நடக்கின்றனர் என்பதை நாங்கள் தினம் தினம் அனுபவப்படுகிறோம். நாங்கள் இவ்வாறு அநியாயம் இழைக்கப்படும்போதே நாங்கள் ஆத்திரப்படுவதும், சிலநேரம் எல்லோரையுமே சந்தேகப்படுவதும். ஆனால் உங்களைப்போல் பரந்த தன்மையோடு சிந்தித்து நடக்கின்ற தமிழ் அன்பர்களையும் எப்போதாவது சந்திக்கத்தான் செய்கிறோம்.

    நாங்கள் எப்போதும் நியாயமான முறையில் நடுநிலையாக நடக்கும் மாற்று மதத்தவரை எப்போதும் தலையில் தூக்கி வைத்து நன்றிகடன் செலுத்துபவர்கள். உதாரணமாக, விஜித தேரர், சோபித தேரர், ராஜித செனரதன அமைச்சர், பாலித ரங்கா, என் சுமேந்திரனையும் அவ்வாறுதான் பார்க்கிறோம், மரியாதை செலுத்துகிறோம்.

    நாங்களும் எப்போதும் நடுநிலையாகவே நடப்பவர்கள் (இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு சிலரை தவிர). காரணம் அல்லாஹ்வால் அவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளோம்...

    "இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்" ... (அல்-குர்ஆன் 2: 143).

    "ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்).ஒருவர் முஸ்லிமாக இருப்பினும்கூட, நன்மையான விஷயங்களில் மாத்திரமே உதவ வேண்டும். தீமைகளுக்குத் துணைபோகக்கூடாது. தனது இனத்திற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அநீதியிலும், அத்துமீறலிலும் தீமையான விஷயங்களிலும் துணை போவதே இனவாதமாகும் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் நடுநிலையை இஸ்லாம் வலியுறுத்துவதை காணலாம்.

    மாற்று மதத்தவராயினும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை. இதற்கு நபி முஹம்மது(ஸல்) அவர்களது வாழ்விலே நடந்த ஒரு சம்பவம் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

    ஒரு முறை யூத ஜனாஸா (மரணித்த உடல்) ஒன்று பாதைவழியே கொண்டு செல்லப்பட்டபோது நபியவர்கள் எழுந்து நின்றார்கள். இது குறித்து ஸஹாபிகள் வியப்பாகக் கேட்கவே, "இதுவும் ஒரு மனித ஆத்மா அல்லவா?" எனக் கூறினார்கள்.

    அன்பின் சஜந்தன்,

    நீங்கள் இஸ்லாத்தை புரிந்துகொள்ள, அறிந்துகொள்ள விரும்பினால் கீழ்வரும் இணையத்தளத்திலும் தேடுங்கள்.

    http://www.readislam.net/portal/



    ReplyDelete
  12. உங்கள் இருவருக்கும் (சஜந்தன் மற்றும் நியாஸ்) நன்றி உங்களுக்கு அல்லாh நேர்வழியைக் காட்டுவானாக சஜந்தனின் கருத்துக்கள் அடிப்படையில் அவரது செயற்பாடுகள் இருந்தால் அவரது செயற்பாடுகளுக்கு இறைவன் மேலும் வலுவூட்டுவானாக நான் எந்த அளவூ சிங்கள இனவாதிகளின் தமிழ் சமுகத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்பதைக் காண வரிம்பினால் சஜந்தன் எனது பேஸ் புக்கைப் பார்க்கவூம் (பதிவூகள் சிங்கள மொழியில் இருக்கும்) mohamed_jiffry

    ReplyDelete
  13. இது ஒரு மனித பிழை. இதனை ஒரு முஸ்லிம் மேற்பார்வை செய்யாமல் அச்சிடப்படமாட்டாது. மீறி வேண்டுமென்றே செய்திருந்தாலும் நபி (ஸல்) அவர்களின் புகழில் எந்த குறைவும் ஏற்பட போவதில்லை இதற்கு இறை தூதரின் வறலாறே சாட்சி.
    இதற்காக இன ரீதியாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
    ஹீரோவாக சந்தர்பம் பார்த்து கிடக்கும் குன்டர்களுக்கு இது ஒரு மல்யுத்தம் தான்

    ReplyDelete
    Replies
    1. well said ziyath. This is what I was telling our cyber Heros. People tell worse things than this and in prophets period people did worse things to them ? What was the reply from him ???? He forgave them all after Makkah victory. And that old lady who threw rubbish on prophets body. These Heros should go and read history.

      Delete
  14. சியாத் விளக்கம் தெரியாமல் கருத்துக் கூறவோண்டாம் இங்கு யாரும் கீரோயிசத்துக்காக கொமன்ட் பண்ணவில்லை சரி பார்த்தபின்னர் தான் பதிப்பில் போது வேண்டுமென்றே செய்யப்பட்டதகத்தான் தோண்றுகிறது பெரிய நியாயவான் கதை பேசத் தேவையில்லை எமது சகோதரர்கள் ஒன்றும் வாயக்கு வந்ததைப் பேசவூம் இல்லை உனக்கு ரிஸாட்டுடன் அரசியல் பிரச்சினை என்றால் அதை வேறு இடத்தில் காட்டிக்கொள் சமுகத்தின் அதிலும் இறைத்தூதரையே கொச்சைப்படுத்துவதற்கு துணை போகாதே நபிக்கும் நரிக்கும் வித்தியாசம் தெரியாமலா? தாய்மொழி தமிழ் என்கிறார்கள் அல்லது இது கீபோட்டில் பிழைவரக் கூடிய இடங்களில் உள்ளதா?

    புகழில் குறைவூ ஏற்படாது என்பதற்காக எதைச் செய்தாலும் அணுமதிப்பீர்களோ? நியாhமான வழியில் தட்டிக் கேட்பவனைத் தடுத்துத் தடுத்துத்தானடா? சமுகத்தில் போராட்டங்களுக்கு விதை விதித்தீர்கள்? கறடிக்குழிக்கும் சிலாவத்துறைக்கும் போய்ப்பார்? அங்கு அவை முஸ்லிம்கள் வாழ்ந்த நிலமா இல்லையா என்று? உப்புக் குழத்து மன்னார் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பைப் பார் அப்போது தெரியூம் உனக்கும் தெரியூம் அவர்களுது நியாயங்கள்? ஏதோ பெரிய நியாயவான் குஞ்சு

    இறைத்தூதரின் எந்த வரலாற்றுப் புத்தகத்தில் நபிக்கு நரி என்றும் நாபியின் தாய்க்கு நாய் என்றும் பதிக்கப்பட முஸ்லிம்கள் கோபப்படாமல் இருந்து நபியின் புகழ் அதிகரித்தது எங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது உனக்கு அரசியலா?

    வடக்கில் உள்ள தமிழ் அதிகாரிகளுடன் நீ முஸ்லிம் என்று தெரியாத நிலையில் தமிழர்கள் தமிழ் பேசும் வித்ததில் பேசிப்பார் அப்போது விளங்கும் உண்மை நிலை (நல்லவர்கள் சிலரும் உள்ளனர்) மேலும் பதிவிட நினைக்கிறேன் அல்லாhவிற்காக நிறுத்திக் கொள்கிறௌர் புரிந்து கொள் சகோதரா?

    ReplyDelete
    Replies
    1. Jiffry didn't you notice நீங்களே நபி என்று எழுதுவதற்குப்பதிலாக " நாபி " எழுதியுள்ளீர்கள்.
      உண்மையாக நபியின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் நபியை முற்றாக பின்பற்ற try பண்ணுவார்களே தவிர முட்டாள்தனமாக சிறு எழுத்துப்பிழைகளுக்காக அந்நியர்கள் நம் இஸ்லாத்தைப் பார்த்து பயப்படுமளவுக்கு நடந்து கொள்ளமாட்டார்கள்.

      Delete
  15. தம்பி சியாத்,

    எங்களுக்கும் தெரியும் "இவ்வாறன மட்டமான செயற்பாடுகளால்" இஸ்லாத்திற்கு அணுவளவும் இழுக்கு ஏற்படாது என்றும், மாறாக அதன் மகிமை மேலும் உயரும் என்றும்" (உதாரணமாக, இஸ்லாத்தை விமர்சித்து, பின்னர் உண்மைகள் விளங்கி கடைசியில் அதன் காலடியில் மண்டியிட்ட எத்தனையோ மனிதர்களை உலகில் அப்போதும் கண்டோம், இப்போது நாளாந்தம் காண்கிறோம்).

    இருந்தாலும், இஸ்லாம் தாக்கப்படும்போது உண்மையான நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும். அதனால் அவர்கள் முணங்கத்தான் செய்வார்கள். ஆத்திரப்படவும் செய்வார்கள். எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருந்தாலும் தான் அன்பு வைத்தவருக்கு அடிபடும்போது ஒருகணம் ஆடித்தான் போவார். இது "உங்களுக்கு" புரியாவிட்டால், வலி உணராவிட்டால் வலி உணர்ந்தவர்களை முணங்க விடுங்கள். அப்போதுதான் அடித்தவருக்கும் தான் அடித்தது வேதனைக்குரியது என்று புரியும்.



    ReplyDelete
  16. வொயிஸ் நபி என்பதுக் நான் டைப் செய்யூம் போது கீபோட் மாறி அழுத்தப்பட்டுள்ளதை யாராலும் உணரலாம் பாருங்கள் (ப விற்கு ஜீ யூம் அரவிற்கு எச்சும் பக்கத்தில் உள்ளது) உங்களுக்கு வடக்கின் நிலை தெரியாமல் இருக்கலாம் வெளியில் காட்டுவது ஒன்று செய்வது ஒன்று அதை நான் வடக்கில் வேலை செய்கின்ற போதெல்லாம் முகம் கொடுக்கும் அவர்களின் கருத்துக்களில் இருந்து உணர்ந்துள்ளேன் உங்களுக்கு வேண்டுமானால் அல்லாh நாடினால் கேழுங்கள் உங்களுக்கும் சில விடயங்கள் அதிர்ச்சியை ஊட்டலாம் அவர்கள் நான் முஸ்லிம் என்று தெரியாமல் உழறித்தள்ளிய விடயங்கள் ஒன்று மட்டும் கூறுகிறேன் கருத்திட்டங்களை மதிப்பிட பல தடவைகள் சர்வதேச நிறவனங்களின் ஆலோசகராக வடக்கில் சேவையாற்றியள்ளேன் அதன்போது அவர்கள் நான் கதைக்கும் தமிழில் (என்னால் தமிழ் நன்பர்கள் போல் தமிழை உச்சரிக்க முடியூம்) அடையாளம் காணாமல் சொல்லும் விடயங்கள் திகைப்பூட்டுவையாக அமைந்துள்ளன நீங்கள் சொல்வது போல் உண்மையான முஸ்லிம் நபி வழியைப் பின்பற்றுவதில் மாத்திரம்தான் நொக்காக் கொண்டிருப்பான் என்பது நபிவழியல்ல மார்க்கத்தில் கழங்கங்கள் ஏற்படும் போது நம்மால் முடியமான அறவூ அதைத் தடுக்க வேண்டும் சிலர் கூறும் கருத்துக்கள் அவர்களின் மாற்றுமத நண்பர்களைத் திருப்பிப் படுத்தவே அன்றி வேறில்லை என்பதும் எங்களுக்குத் தெரியூம் உங்களுக்கும் தெரியூம் நாத்திகர் சேறு பூசுவதற்காக கேள்வி கேட்கும் போது அவருக்கு பொயிட் எடுத்துக் கொடுத்தவர்களையூம் நீங்கள் அறியாமல் இல்லை நான் ஒருபோதும் நமது சமுகத்தின் நண்பர்களுடன் சமுக வலைத்தளங்களில் நமது முஸ்லிம் நண்பர்களுடன் வாதிக்கவூம் அவைகளைப் பதியவூம் விரும்பவில்லை ஆனால் இஸ்லாமும் முஸ்லிம் சமுகமும் கொச்சைப்படுத்தப்படும் விதமாக பதிவிட்டால் அதை வேடிக்கை பார்க்கவூம் தயாரில்லை முடிக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

    ReplyDelete

Powered by Blogger.