Header Ads



கோத்தபாயவை கைது செய்வதற்கு பச்சைக்கொடி..!

அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபரிடம் அறிக்கை வழங்கியுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனம் வாடகைக்கு பெற்றுக்கொண்ட மஹாநுவர கப்பல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை கவனத்தில் கொண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிக்கை வழங்கியுள்ளார்.

நிஷ்சங்க சேனாதிபதியை தவிர அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் மஞ்சுள குமார யாப்பாவை கைது செய்ய முடியும் எனவும் அதற்கு உறுதுணை வழங்கி குற்றச்சாட்டின் கீிழ் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரை கைது செய்ய முடியும் எனவும்,

இவர்களை கைது செய்து நீதவான் முன்னிலையில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பண சலவை சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக பணத்தை சம்பாதித்தமை குற்றம் என்பதால், அது தொடர்பாகவும் இவர்கள் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.