Header Ads



UNP அமைச்சர்களுக்கிடையில் முரண்பாடா..?

பெற்றோருக்கு தமது பிள்ளைகள் இருக்கின்ற இடத்தை அறிந்து கொள்ளும் வகையிலான விசேட ஜீ.பி.எஸ் சாதனத்தை வழங்குவதற்கு, தற்போதைய சட்டத்திட்டத்தின் படி அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் தமது பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும் அவசர தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும், பிள்ளைகள் இருக்கும் இடத்தை பெற்றோர் இலகுவாக அறிந்து கொள்வதற்கும் வசதியான இந்த சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில்நுட்ப அமைச்சர் ஹரேன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

இந்த சாதனம் 2000 ரூபாவுக்கும் 4000 ரூபாவுக்கும் இடையிலான விலையைக் கொண்டதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறி இருந்தார். 

இது சம்மந்தமாக செய்திப்பிரிவு கல்வி அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தற்போதுள்ள பாடசாலைகளுக்கான சட்டத்திட்டங்களின் படி இவ்வாறான கருவிகளை விநியோகிக்க இடமில்லை என்று கூறினார்.

No comments

Powered by Blogger.