Header Ads



இலங்கை பொலிஸாரின் புதிய யுக்தி..!

பஸ்ஸர பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு தேநீர் விருந்தளித்து நல் அறிவுரை வழங்கும் புதுமுயற்சியொன்றை பொலிசார் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பஸ்ஸர பொலிசார் தெரிவித்துள்ளதாவது,

சிறுசிறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்படும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விளக்கமறியலில் வைப்பதன் ஊடாக அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புக் கிடைப்பதில்லை. அத்துடன் பொலிசார் மற்றும் நீதிமன்றத்தின் நேரமும் விரயமாக்கப்படுகின்றது.

அதற்குப் பதிலாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் குற்றவாளிகளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, தேநீர் விருந்தளித்து அறிவுரை கூறி திருத்தும் பரீட்சார்த்த முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளோம்.

இதன் மூலம் குற்றவாளிகளின் மனங்களில் ஒரு மாறுதல் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது என்றும் பஸ்ஸர பொலிசார் தெரிவித்துள்ளனர்.


4 comments:

  1. This is really make sense of humor/thank for who ever implimented In the police station in passara

    ReplyDelete
  2. உன்மைல் வர வேட்கத் தக்க விடயமாகும்
    அடித்துத் திருத்துற மனிதனை விட அன்பால் திருத்துற மனிதன் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பான்

    ReplyDelete
  3. மிக அருமையான வரவேற்கதக்க செயல்.நன்றிகள்பல கோடி.....

    ReplyDelete
  4. அப்படியே பொலீஸ் உடற்பயிற்சி நிபுணர்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு உடம்பையும் பிடித்து விட்டால் நன்றாக இருக்குமே..

    ReplyDelete

Powered by Blogger.