Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள, சீனா மேற்கொள்ளும் தந்திரம்

இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் இவ்வாறு கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளது.

சீனா, இலங்கையில் மக்கள் தொடர்பு விவகாரங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சாத்திய ஆய்வுகளை செய்யாது, சுற்றாடல் பாதிப்புக்களை கருத்திற் கொள்ளாது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்திருந்தது.

எனினும், புதிய அரசாங்கம் இந்த திட்டங்களை இடைநிறுத்தி சாத்திய ஆய்வுகளையும், சுற்றாடல் பாதிப்பு குறித்த விபரங்களையும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனா தொடர்பிலான நன்மதிப்பை உயர்த்தும் முனைப்புக்களில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய செய்தி முகவர் நிறுவனங்கள் ஒன்றும் இயங்காத போதிலும் சீனாவின் ஓinhரய செய்தி சேவை இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரக வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு சீனா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாகவும், இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயாகும் எனவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.