Header Ads



ஜே.வி.பி. மீது ஈர்க்கப்படும், முஸ்லிம் சமூகம்

-நஜீப் பின் கபூர்-
 
என்றுமில்லாதவாறு இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தில்; குறிப்பாக இளைஞர்களின் கவணம் ஜேவிபி பக்கம் ஈக்கப்படுவதாகத் தெரிகின்றது. இதற்கு முக்கிய காரணம் அலுத்கம- பேருவளை சம்பவங்களின் போது அந்தக் கட்சியினர் இதய சுத்தியுடன் முஸ்லிம்களுக்கு சார்பாக குரல் கொடுத்தது முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. அலுத்கம - பேருவளை சம்பவத்தின்போது நடந்த விவாதத்தின் போது அமைச்சுப் பதவிகளை வைத்து அதிகாரத்தில் இருந்வர்கள் குறிப்பாக முஸ்லிம் தனித்துவம் உரிமை என்று குரல் கொடுக்கின்ற ஹக்கீம், ரிஷாட் போன்றவர்கள் அதில் பங்கு கொள்வதைத் தவிர்த்து வந்த போது ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க மிகச் சிறப்பாக அந்த விவாதத்தில் பங்கு கொண்டு உரையாற்றி இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை ரிஷாட் தவிர்த்திருந்ததுடன், விவாதாம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது மு.கா.தலைவரும் நீதி அமைச்சருமான ஹக்கீம் அங்கிருந்து ஸ்கெப்பாக முயன்ற போது அவரைப் பார்த்து விவாதத்தில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் நாங்கள் பேசுவதையாவது கொஞ்சம் கேட்டு வி;டுப் போங்கள் என்று அவரை நையாண்டி பண்ணி இருக்கின்றார்.

கடந்த வியாழக்கிழமை மடவளை முஸ்லிம் கிராமத்தில் நடந்த ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் அணுரகுமர திசாநாயக்க இதனை அங்கு  குறிப்பிட்டிருக்கினறார். அதே போன்று பரவலாக ஜேவிபி பற்றி இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

ஜேவிபி தலைவர்களுடன் கட்டுரையாளன் தொடர்பில் இருப்பதனால் அவர்கள் முஸ்லிம் சமூகம் பற்றி கூறுகின்ற  சில தகவல்களை அறிந்து கொள்ள முடிக்கின்றது. அந்த வகையில் ஊவாவில் மாகாணத் தேர்தலில் பல முஸ்லிம் கிராமங்களுக்கு ஜேவிபி தலைவர்கள் அழைக்கப்பட்டு ஊரே அங்கு திரண்டு வந்து ஆதரவு கொடுத்திருக்கின்றது ஆனால் வாக்குப் பொட்டியைப் பார்த்தால் பெரும் ஏமாற்றமாக இருந்தது என்று ஒரு ஜேவிபி முக்கிஸ்தர் கட்டரையாளனிடம் தனது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தி இருந்தார்.ஆனால் அலுத்கமை பேருவளையில் கனிசமான முஸ்லிம்கள் ஜேவிபிக்கு வாக்களித்திருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்தத் தேர்தலிலும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற ஜேவிபி மீதான ஈர்ப்பு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்தை வாக்குப் பெட்டிகளில் பார்க்க முடியுமாக இருக்கும்.

6 comments:

  1. Ignore SLFP, UNP, Muslim Groups....Vote for JVP.

    ReplyDelete
  2. yes JVP is more then pure SLMC & ACMC so not only Muslims even Sinhalese also want to support JVP.

    ReplyDelete
  3. Muslims have a wonderful opportunity to be grateful to JVP for standing by the
    community at a dangerously and deadly difficult time . JVP did it in good faith.
    They are serious about communal harmony . They respect all communities as
    equal . Muslims must not be late to recognize this fact . Muslims have an
    opportunity to send a message to the country that Muslims will stand with the
    party that is ready to protect it under difficult times . We have so many elections
    and in the last president election we whole heartedly elected My3 . Why not give
    JVP a chance ? Come on , give them a boost for a CHANGE .

    ReplyDelete
  4. we should stand with jvp, at least they will talk 4 us in difficult time

    ReplyDelete
  5. ஆன்மீக உணர்வுகள் அந்தரங்கமானவை. அவரவர் தனித்தனியாக உணர்ந்து கொள்ள வேண்டிவை அவற்றை திட்டமிட்டு மக்களைச் சுரண்டுவதற்குத் துணைபோகும் நிறுவனமாக்கியவர்கள்தான் மதவாதக்கட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் தங்கள் கோஷங்களை வைத்து தமது இருப்பைத் தக்க வைப்பதும் கிடைக்கும் வரை சுரண்டுவதும்தான்.

    இத்தகையோரிடம் நேர்மையையும் சமூகத்திற்காகப் பேசும் யோக்கியதையையும் எதிர்பார்க்க முடியுமா என்ன?

    ReplyDelete

Powered by Blogger.