Header Ads



தங்கத்துடன் புதைந்துபோன ரயில் கண்டுபிடிப்பு - தொட வேண்டாமென எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போரின் போது தங்கம் மற்றும் வைரத்துடன் மண்ணில் புதைந்து மாயமான ரெயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1945–ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லரின் நாஷிப் படை ஆதிக்கம் செலுத்தியது. அப்போது தங்கம், வைரம் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

அந்த ரெயிலுக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த ரெயில் போலந்தின் எல்லையில் உள்ள வால்பிரையச் நகரம் அருகே சென்ற போது நடந்த குண்டு வீச்சில் மண்ணில் புதைந்து மாயமானது.

அந்த ரெயில்கள் புதைந்து மாயமான அந்த குறிப்பிட்ட பகுதி எது என கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இச்சம்பவம் நடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது போலந்து நாடு மாயமான அந்த ரெயிலை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரேடார் மூலம் அந்த ரெயில் புதைந்து கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலந்து துணை கலாசார மந்திரி பியோர்டார் ஷுசோவ்ஸ் கி தெரிவித்துள்ளார். அந்த ரெயில் புதைந்து கிடக்கும் இடம் 99 சதவீதம் சரியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ரெயிலில் இருக்கும் பொக்கிஷங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் யாரும் அதை தேட வேண்டாம். ஏனெனில் அதை தொட்டால் உடனே வெடிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.