Header Ads



முஸ்லிம்களின் புது வருடம் "முஹர்ரம்" அரச விடுமுறையாக ஏற்கும் கட்சிக்கே ஆதரவு

-யு.எல்.எம். றியாஸ்-

நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள எந்தக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை .

எமது நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களும், சிறுபான்மையின் பெரும்பான்மை தமிழர்களும் தங்களின் புது வருடத்தினை அரச பொது, வர்த்தக வங்கி விடுமுறையாக  கொண்டாடுகின்றனர். ஏன் முஸ்லிம்களின் புது வருடத்தினையும் அரச விடுமுறையாக கொண்டாட முடியாதா?

இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற பாடுபட்டவர்கள் சிங்கள,தமிழ்,முஸ்லிம்ஆகிய மூன்று சமூகத்தினரும்தான் தேர்தல் காலத்தில் வீறாப்புடன் பேசுகின்ற எந்த எந்த முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம்களின் தேசிய விடயத்தில் அக்கறை கொள்வதில்லை மறைந்த தலைவர்களான ரீ. பி ஜாயா, அறிஞ்சர் சித்தி லெப்பை ,சேர் ராசீக் பரீட்,ஏ.எம்.ஏ. அசீஸ், டாக்டர் கலீல், பதியுதீன் மஹ்மூத் போன்ற தூர சிந்தனையுள்ள தலைவர்களினாலேயே முஸ்லிம்களின் விசேட தினங்கள் விடுமுறை தினங்களாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

தற்போது தாங்கள் தான் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்பவர்கள் காலத்துக்கு காலம் தேர்தலுக்கு தேர்தல் கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றார்களே தவிர மறைந்த முஸ்லிம் தலைவர்கள் செய்த நிலையான
விடயத்தினையும் செய்யவும் இல்லை,செய்வதற்கு முன்வரவும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் பிரதேசங்களில் பிரதான நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன ஐக்கிய தேசியக் கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இந்த நான்கு கட்சிகளில் எந்த கட்சி முஸ்லிம்களின் புது வருடத்தினை அரச விடுமுறை தினமாக்க முன்வருகிறதோ அந்தக் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் கல்முனையில் தலைமை காரியாலயமாக சேவையாற்றிவரும் சமூக முற்போக்கு முன்னணி ஆதரவினை வழங்குவதுடன் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட தயங்கப் போவதில்லை என அதன் தலைவர் ஏ.எம்.ஏ. அசீஸ் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. Its a strange request,
    Where its mentioned in either Quran or Hadeeth that Muharram has to be celebrated...
    This people could have asked for EID Ul ALGHA (Haj Festival) at least...
    Further it seems very narrow minded thinking lets think of our COUNTRY Sri Lanka in holistic view for good governance, justice, rule and order, equality among great citizen of this nation regardless of his/her religion/ethnicity......

    ReplyDelete
  2. Muslim nadugalil illatha vidumurai suma elecn.koothukku islatha lunu dey aakkadinga

    ReplyDelete
  3. Already we have enough holidays. No need anymore holidays.

    ReplyDelete
  4. Srilanka has given a lot of facilities for Muslim people new year holiday is not necessary for us ...it's enough for us

    ReplyDelete
  5. முஹர்ரம் புது வருட விடுமுறை தேவை இல்லாத ஒரு விடயம் உண்மையாகவே நபியின் காலத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட ஆரம்ப மாதமாக இருக்க வில்லை அப்போ இப்ப இந்த பித்தத் அதற்க்கு அதை எடுத்துக்கொண்டு பல இஸ்லாத்தில் இல்லாத வேலைகளை செய்து மக்களை நாசமாக்கவா ?

    ReplyDelete

Powered by Blogger.