Header Ads



"முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், இன்னும் முற்றுப் பெறவில்லை"

(மனசாட்சி என்ற பெயரில் கண்டியில் ஒரு துண்டுப் பிரசுரம்  வெளியாகி இருக்கின்றது. மாவட்டத்தில் ஜே.வி.பி. சார்பில் போட்டியிடுகின்ற  மன்சில் முத்தலிப்பிற்காக (1989ல் மேசைப் பந்துப் போட்டியில் ஜனாதிபதி விருது வென்றவர்) ஒரு அன்பர் அதனை அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார். அதனை வாசகர்களின் கவனத்திற்காக இங்கே தருகின்றோம்.)

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்குள்ள தொடர்புகள் மிகவும் பழைமை வாய்ந்தது.  வரலாற்றுக் காலந்தொட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். சிங்கள அரசர்கள் காலத்தில் அரச சபைகளிலும், படைகளிலும் முஸ்லிம்கள் பல்வேறு பதவிகளை வகித்து வந்திருக்கின்றார்கள்.

2ம் இராசசிங்ஹ மன்னனைக் காட்டிக் கொடுக்காததால் கோபமுற்ற பறங்கியர்கள்-போத்துக்கேயர், ஒரு முஸ்லிம் தாயை   வெட்டிச்சாய்க்கின்றனர். இதனை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அரசன் பின்னர் வெளியே வந்து அவளது உடம்பிலிருந்து வழிகின்ற குருதியைத் தனது கரங்களால் தொட்டு  மா ரெக்க லே என்று நன்றியுணர்வுடன் அவளுக்காக மனம் நோகின்றான். ஊவா- பங்கரகம்மன கிராமத்தில் நடந்த  இந்த வரலாற்றுச்  சம்பவம் பாடப் புத்தகங்களிலும் பதிவாகி இருந்தது. 

இந்தவாறு நாட்டுக்குத் தியாகம் செய்த பரம்பரையை இன்று இஸ்ரேல்-மொசட்டின் கூலிப்படையாக செயலாற்றுகின்ற ஒரு கூட்டம் தொந்தரவு செய்து வருகின்றது. இவர்களின் செயல்பாடுகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. என்பதனையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். கடந்த காலத்தில் இருந்த அரசு இவர்களுக்கு ஒத்துழைத்தது தெரிந்ததே! 

நமது அரசியல் தலைமைகள்

முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் போது; ஜேவிபிதான் இதய சுத்தியுடன் செயல் பட்டது என்பதனை இந்த நாட்டு முஸ்லிம்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றார்கள். 

இந்த இக்கட்டான நிலையில் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ள அன்று ஊமைகளாக இருந்ததும், முஸ்லிம்ளுக்கு நன்றாக நினைவிருக்கும். தேர்தல் வந்திருப்பதால்தான் இப்போது சமூகத்தைப்பற்றி அவர்களுக்கு நினைவு வந்திருக்கின்றது. 
  
இஸ்லாம் கூறுகின்ற அரசியல்

இன்று  இஸ்லாம் கூறுகின்ற அரசியலை இந்த நாட்டில் செய்கின்ற ஒரே அரசியல் இயக்கம் ஜேவிபி மட்டுமே. இஸ்லாத்தையும் முஸ்லிம் தனித்துவத்தையும்   பேசுகின்ற முஸ்லிம் தலைவர்கள் சுயநலம் கலந்த அரசியல் தான் எம்மால் செய்ய முடியும் என்று பகிரங்கமாக சொல்லி இருந்ததை இந்த நாட்டு இஸ்லாமிய சமூகம் இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

முஸ்லிம்களே விளித்தெழுங்கள்

முஸ்லிம்களே! இந்த நாட்டின் நலன் கருதி தூய்மையான ஒரு அரசியலைச் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்காக துணிவுடன் குரல் கொடுக்கின்ற ஜேவிபியின் கரங்களை இந்தத் தேர்தலில் நாம் பலப்படுத்த வேண்டும் என்பது எமது சமூக-சமயக் கடமையாகவும் இருக்கினறது. ஆம் நாங்கள் ஜேவிபிக்குத்தான் கட்டாயம் வாக்குக் கொடுக்க வேண்டும் என்பதனை வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி விடாமல் அதனை புள்ளடியால் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கண்டி மாவட்ட முஸ்லிம்களே!

இப்போது ஜேவிப்பிக்கு வாக்களித்து, நல்லாட்சிக்கான காவலர்களாக அவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என இன்று நாடே அணி திரண்டு நிற்கின்றது. இந்தத் தேர்தலில்  கண்டி மாவட்டத்தில் இரு ஆசனங்களை ஜேவிபி வெற்றி கொள்ளும் என கருதப்படுகின்றது. எனவே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இக்கட்டான நேரங்களில் துணைக்கு வருகின்ற ஜேவிப்பிக்கு ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமூகம் தமது வாக்குகளை வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றது. 

கண்டி மாவட்டதில் 149882 முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். எனவே ஜேவிபியில் போட்டியிடுகின்ற மன்சில் முத்தலிப் என்ற முஸ்லிம் வேட்பாளரை நாம் கட்டாம் வெற்றி பெறச் செய்து, ஜேவிபிக்கு நன்றிக் கடன் செலுத்துவதுடன், முஸ்லிம்கள் இந்த முறை கனிசமாக ஜேவிபிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதனையும் உறுதிப்டுத்த வேண்டும்.

இந்த முறை மிகச் சிறந்த ஒரு தேச-சமூகப் பற்றாளன் மன்சில் முத்தலிப் (10) என்ற சகோதரனை ஜேவிபி உங்களுக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எனவே ஜேவிபியின் சின்னமான மணிக்கு வாக்களித்து மன்சிலுக்கும் ஒரு விருப்பு வாக்கை வழங்குமாறு நாம் சமூகத்தின் பேரால் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். 

முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஜேவிபி
தொடர்ந்தும் போராடும் தலைவர்; - அணுரகுமார திசாநாயக்க

-மிக்க நன்றி 

3 comments:

  1. yes all muslims in kandy must vote for JVP

    ReplyDelete
  2. Best idea to lose hakeem and haleem.or who is the one going tovote UNPpks vote kirialla.lucky dias and brother of mahindanda kandy dustruc condidate.pls wake up our society pls

    ReplyDelete
  3. Yes lakshman kiriella wants to cut down Muslim MPs from 4 to 2 . whoever voting for unp please cast your third vote to Alvis who was born in akurana and he did so many things in akurana for Muslims.

    ReplyDelete

Powered by Blogger.