Header Ads



''அமைச்சர்களுக்கு என ஒழுக்கக் கோவையை, அறிமுகம் செய்யுங்கள்''

நல்லாட்சிக்கான பங்களிப்பை சுட்டிக்காட்டும் வகையிலான ஒழுக்கக்கோவை ஒன்றை அமைச்சரவைக்கு அறிமுகம் செய்வதன் அவசியத்தை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் பிரதமரின் நெறிப்படுத்தலில் புதிய அரசாங்கம் அடுத்த வாரத்தில் கன்னி அமர்வைக் கூட்டவுள்ளதாக சந்திரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒழுக்கக்கோவை தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சந்திரா ஜயரத்ன வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாழ்விற்கான விடயங்களைப் போன்று புதிய அமைச்சரவையில் தொடர்புடைய உறுப்பினர்களது கட்சிகளின் விஞ்ஞாபனங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒழுக்கக்கோவையை அமைச்சரவை உப குழு ஊடாக மேம்படுத்தி ஐக்கிய அமெரிக்க அமைச்சரவையின் ஒழுக்கக்கோவைக்கு நிகராகத் தயாரிக்க வேண்டும் என சந்திரா ஜயரத்ன ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அந்த ஒழுக்கக்கோவை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


1 comment:

  1. கல்க்கூட்டத்துக்கு என்ன ஒழுக்க கோவை வேண்டிகிடக்கு பிடிபடாமல் கலவடுன வேண்டிய முறைகளை நெறிப்படுத்தத் வேண்டியதுதான்.எருமை மாடுகளை மெடிகல் கல்லூரியில் சேர்த்தால் எப்படி இருக்கும்.தோல்விகண்ட கள்ளனுக்கல்லாம் அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு என்ன சட்டக்கோவை.வாக்களித்த மக்கள் விறு பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.