Header Ads



பீரிஸின் வீட்டில் முக்கிய கலந்துரையாடல் - மகிந்த பங்கேற்பு, கதிரைச் சின்னத்தை தெரிவுசெய்ய அதிக விருப்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.ம.சு.முவிலிருந்து விலகி தனியான கட்சியொன்றில் தேர்தலில் நிற்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று தற்போது பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் கொழும்பிலுள்ள வீட்டில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருங்கிய எம்.பிக்கள் சிலர் பங்குபற்றியுள்ளனர். இக்கூட்டத்தில் மஹிந்தவிற்கு அதிக வாய்ப்பைத் தரும் வகையிலான கட்சியின் பெயர் மற்றும் தொகுதி குறித்து ஆராயப்படுவதோடு, குறிப்பாக தி.மு. ஜயரத்ன செயலாளராகவும் மஹிந்த தலைவராகவும் இருக்கும் கதிரைச் சின்னத்தைக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணியைத் தெரிவு செய்வது தொடர்பில் அதிகளவானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்கவுள்ள இடமாக ஹம்பாந்தோட்டை அல்லது தென்மாகாண பிரதேசமொன்றாக இருக்கக்கூடாது என வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்பிரதேசங்களில் மஹிந்த ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், போட்டியிடாமலேயே வாக்குகளைப் பெறலாம் எனும் திட்டத்தில் வேறொரு பகுதியில் போட்டியிடுவதற்கே தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இத்திட்டங்கள் யாவும் இன்னும் கவனத்தில்கொள்ளப்பட்டு வரும் விடயங்களாக இருப்பதோடு இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.