Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் முடிந்தது - இறுதித் தீர்மானம் எதுவுமில்லை

-மு.இ.உமர் அலி-

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (02)  கட்சித் தலைமையகத்தில் சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

பெரும்பாலான உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடல், கூட்டுச் சேர்ந்து போட்டியிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பல விதமான கருத்துக்கள் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் இறுதி தீர்மானம் எதுவும் இதன்போது மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் கூடி, பாராளுமன்ற தேர்தல், எந்தந்த தொகுதிகளில் எவர் போட்டியிடுவது என்பது பற்றிய இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

7 comments:

  1. ஒன்று கூடுவதும் கூடிக் கூடி உருப்படியான முடிவுகளின்றி இவர்கள் டீ குடித்துத் திரும்புவதும் இன்று நேற்றா நடைபெறுகின்றது..?

    ReplyDelete
  2. This is not new for SLMC ....

    ReplyDelete
  3. பழைய குருடி கதவை திறடி என்ற கதைதானா இப்பவும்?. உங்கட கூடி முடிவின்றி கலைகின்ற கதைதான் புளிச்சு போச்சே. புதுசா ஏதாவது சொல்லுங்க ஐயா

    ReplyDelete
  4. கூடுவதும் கலைவதும் இவர்களுக்கு உரிய விடயம் தான். கடைசியில் எல்லோரும் ஒரு பையத் எடுத்து தலைவரிடம் கடைசி முடிவை ஒப்படைப்பார்கள். தலைவர் பெயர்ந்து புரட்சிகரமான முடிவை அறிவிப்பார். ஆனால் இந்த முறையும் கட்சியை காப்பாற்றும் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்வார் என நினைக்கிறோம்.

    ReplyDelete
  5. Kuruvi how are you. Long time no see

    ReplyDelete
  6. தங்கள் கட்சி விடயங்களை கூட கூடி பேசி தெளிவா முடிவெடுக்க முடியாதவனுக எப்படி ஒரு சமூகத்துக்கு நல்லது பண்ண முடிவெடுப்பானுக, ஒற்றுமை கயிறு பிஞ்சிருச்சி. கர்மம்டா.....!

    ReplyDelete

Powered by Blogger.