Header Ads



முதலைக் குட்டியை, திருமணம் செய்த மேயர்


மெக்சிகோவில் வெண்ணிறத்தில் மணமகள் ஆடை அணிவித்து ஜோடிக்கப்பட்ட முதலைக் குட்டியை மேயர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள வினோத நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மீனவ கிராமமான சான்பெட்ரோ ஹவா மெலுகாவில் அறுவடை செழிக்கவும், பருவநிலை சாதகமாக நிலவி மீன்பிடி தொழில் சிறக்கவும் வேண்டி பாரம்பரிய முறைப்படி இந்த வினோத திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமகள் போன்ற வெண்ணிற உடையில் அலங்கரிக்கப்பட்ட முதலை குட்டியை அந்நகர மேயர் ஜோயல் திருமணம் செய்து கொண்டார்.

மரியா இசபெல் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த முதலைக்குட்டி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திறு திறுவென முழித்துக் கொண்டிருந்தது. பின்னர் மரியாவை கையில் ஏந்திய படி ஊர்வலமாக வந்த மேயரும் மீனவ கிராமத்தினரும் இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடினர்.

தங்களது மூதாதையர்களின் நடைமுறைகளில் நம்பிக்கை இருப்பதாகவும், விலங்குகளை திருமணம் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பதை 1789-ம் ஆண்டு அப்பகுதியில் வாழ்ந்த பண்டைய கால இந்தியர்களிடம் இருந்து கற்றுறுக்கொண்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர். 

1 comment:

Powered by Blogger.