Header Ads



வில்பத்துவில் இடம்பெற்றுள்ள காடழிப்பை, எனது இரு கண்களாலும் கண்டேன் - மைத்திரி

எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது வர்த்தகரோ, காடழிப்பு மேற்கொள்வதற்கு எனது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, பொலன்னறுவ, மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுற்றாடலைப் பாதுகாப்பதன் ஊடாகவே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அது அனைவரதும் கடமையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வில்பத்துவில் இடம்பெற்றுள்ள காடழிப்பை நான் எனது இரு கண்களாலும் கண்டேன். தெற்கில் விமான நிலையம் அமைப்பதற்காக பறவைகள் சரணாலயங்கள் அழிக்கப்பட்டன.  விமானங்கள் பறக்க வேண்டுமென்பதற்காக ஆயிரக்கணக்கான மயில்கள் கொல்லப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு என்னுடைய ஆட்சியில் இனி ஒருபோதும் இடமில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான மக்கள் தொகை அடர்த்தியொன்று தற்போது இந்த நாட்டில் இல்லை. யுத்தம் நிலவிய வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 20 சதவீமான மக்கள் தொகை அடர்த்தி காணப்படுகின்றது என்றும் கூறிய ஜனாதிபதி, சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக எதிர்வரும் நாட்களில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று மேலும் கூறினார்.

11 comments:

  1. My3 is getting ready to go home soon.

    ReplyDelete
  2. Ilma a gaffoor.you like non muslim

    ReplyDelete
  3. Ilma a gaffoor.you like non muslim

    ReplyDelete
  4. Hurry will spoil our all ambition.nit to worry.last 3years what was happend?present is goid then past.so we should patient

    ReplyDelete
  5. ஏன் அதில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அகதியாக வாழ்ந்து வருவது உமது கண்களுக்கு இரு தெரியவில்லையா ? காட்டில் வாழும் மிருகங்கள் ,பறவைகளை விட முஸ்லிம்களை கேவலமாக பார்க்கும் இந்த ஜனாதிபதிக்கு நான் வாக்களித்ததை நினைத்து கவலை அடைகிறேன் .

    ReplyDelete
  6. Forest destruction may be taken place. But, who is the culprit, to be investigated and ptoduced before the court. Migrated southern Sinhalese, who also may attend in the destruction.

    ReplyDelete
  7. Dear president, the two eyes are not yours!

    ReplyDelete
  8. ஹம்பாந்தோட்டைப் பகுதிகளில் விமான நிலையம் போன்ற ஆடம்பரத் தேவைகளுக்காக காடழித்ததைப் பற்றி அவர் கூறும்போது வில்பத்து காடுகளை யுத்த மற்றும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக அழித்ததையும் கூறியிருக்கின்றார்.

    இதை நாம் ஏன் நமது சமூகத்தினர் முன்னர் வாழ்ந்த இடங்களிலே மீளக்குடியமர்வதற்காக (கவனிப்பாரற்றுக் கிடந்த நிலத்தில் வளர்ந்திருந்த பற்றைக்) காடுகளை வெட்டிய நிகழ்வோடு தொடர்பு படுத்துகின்றோம் என்று புரியவில்லை.

    இப்படிப் பின்னூட்டம் இடுவதன் மூலம் 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்று நம்மை நாமே காட்டிக்கொடுக்கும் முட்டாள்தனத்தைச் செய்கின்றோம் என்பது புரியவில்லையா நண்பர்களே..?

    ReplyDelete
  9. He has seen the forest being destroyed near Wilpattu while traveling to Jaffna. Mr. President, how do you know that the forest being destroyed is coming under the Wilpattu Saranalayam. Did you carry GIS?

    ReplyDelete
  10. பரவாயில்லையே வொய்ஸ் ஸ்ரீலங்கா..!
    முஸ்லீம்களாக இருந்துவிட்டால் போதும். எதையும் செய்துவிட்டு 'அல்லாஹ் - ரசூல்' என எதையாவது தத்துப்பித்து என்று பேசித் தப்பித்துவிடலாம் என்றுதான் கணிசமானவர்கள் நினைக்கின்றார்கள்.

    தவறை யார் செய்தாலும் அது தவறுதான்!

    ReplyDelete

Powered by Blogger.