Header Ads



"நான் உயிருடன், இருக்கும் வரை" - மைத்திரியின் திட்டவட்ட அறிவிப்பு இது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா என இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறும் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவாறு பேசியுள்ள ஜனாதிபதி, தான் உயிருடன் இருக்கும் வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த எந்த வாய்ப்பும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர்களிடம் இப்படியான நிபந்தனைகள் கூறுவது எல்லாம் நல்லதல்ல.

    ReplyDelete
  2. You are person to take right decisions on time

    ReplyDelete

Powered by Blogger.