Header Ads



மரணத்தை விரும்புகிறாரா மைத்திரி..? தொடரும் மர்மச் சம்பவங்கள் (முழு விபரம் இணைப்பு)

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்வதென  கடந்தவாரம் திட்டமிடப்பட்டிருந்தது.

நுகேகொடவில் உள்ள பெப்பிலியானவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக்நிகழ்விற்கு பிரதமரும், ஜனாதிபதியும் அழைக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி வெசாக்கூடுகளை பார்வையிட்ட பின்னர் மக்களுடன் உரையாற்றி விட்டு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரை நோக்கி சென்றார். அதன் கதவை திறந்து உள்ளே அமர்ந்த அவர் பாதுகாப்பு பிரிவினரின் வருகைக்காக காத்திருந்தார்.

சிறிது நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்த பிரதமர் சேர் இது என்னுடைய வாகனம், உங்களுடைய கார் அங்குள்ளது என தெரிவிக்க ஜனாதிபதி சிறிது நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தார். அதன் பின்னரே அது தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனமில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

ஜனாதிபதியை சரியான வாகனத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்வதற்கு ஜனாhதிபதி  பாதுகாப்பு பிரிவை சேர்ந்த எவரும் இல்லாததே இங்கு நிகழ்ந்த பெரும் தவறு. இந்த தவறு காரணமாக சிறிசேன தாக்குதலிற்கு உள்ளாகும் ஆபத்துகூட உருவாகியிருக்கும். இதனை தவிர்ப்பதற்காகவே தனிப்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அங்குனுகொலபெலச என்ற இடத்தில் இதைவிட மோசமான பாதுகாப்பு தவறுகள் இதற்கு ஓரு வாரத்திற்கு முன்னரே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமம் மகிந்தராஜபக்வின் மெதமுலானவிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. இங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு ஓன்று இடம்பெற்றது. ஜனாதிபதி இதில் உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதனை தனக்கு அவமானகரமான விடயமாக கருதிய மகிந்த தனது ஊரிலிருந்து புறப்பட்டு நுவரேலியா சென்றார்.

இதன் காரணமாக அவரது மகன் நாமல் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதென தீர்மானிக்கப்பட்டது. நாமல் முதலில் விசேட பிரமுகர்களின் பிரிவை நோக்கி சென்ற போது அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கான நுழைவாயிலை நோக்கி சென்றார். அந்த பகுதியின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அவரது நடமாட்டத்தை உன்னிப்பாக அவதானித்த வண்ணமிருந்தனர்.

நாமலுடன் சேர்ந்து உள்ளே நுழைய முயன்ற நபர் ஒருவரின் இடுப்பில் ஏதோ அசைவதை அவர்கள் பார்த்தனர். எனினும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த  ஏஎஸ்பி மல்வலகே நாமலையும் அவருடன் வந்தவரையும் சோதனை செய்யாமல் உள்ளே அனுப்பினார்.

எனினும் கூட்டம் நடைபெறவிருந்த பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையை சேர்ந்த  ராஜபக்ச மற்றும் சம்பத் என்ற இருவரிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வேகமாக நாமலிற்கு அருகில் சென்று அவருடன் வந்த நபரை சோதனை செய்தனர். அவ்வேளை 9 எம்எம் பிஸ்டல் முழுமையாக தயாரான நிலையில் அவரிடம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

குறிப்பிட்ட நபர் கொமாண்டோ படைப்பிரிவை சேர்ந்த கோப்ரல் சேனககுமார என அடையாளம் காணப்பட்டார். அவரிடமிருந்த துப்பாக்கியால் 25 மீற்றர் வரை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளலாம. அந்த நபர் ஜனாதிபதி அமரவிருந்த ஆசனத்திலிருந்து 8 மீற்றர் தொலைவிலேயே நின்றிருந்தார். இதன் காரணமாக அவரால் ஜனாதிபதியை இலகுவாக இலக்கு வைக்க முடிந்திருக்கும்.

பின்னர் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவரும் குறிப்பிட்ட நபரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரிடம் ஓப்படைத்துள்ளனர். இதன் பின்னரே மர்மான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கைத்துப்பாக்கியுடன் வந்த நபரை ஓரு சில நிமிடங்களில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் விடுவித்துள்ளனர். அவர் நாமல் ராஜபக்சவின் நபர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவினர் இந்த சம்பவம் குறித்து கவனத்திற்கு கொண்டுவந்த பின்னரே அது முக்கியத்துவத்தை பெற தொடங்கியது. பொலிஸ்- மா- அதிபர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவின் மிகவும் நேர்மையான அதிகாரி ஓருவரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன. அவருக்கு அளித்த வாக்குமூலத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவரும் தாங்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலையிலிருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றியதை ஓப்புக்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் கைத்துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை உள்ளே அனுமதித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த  ஏஎஸ்பி மல்வலகே  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்னுமொரு காரணத்திற்காகவும் முக்கியமானதாக அமைகின்றது. ஜனாதிபதி சிறிசேன பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்பட்ட விடயங்களில் அனுபவம் குறைவானவர்,இதன் காரணமாக முன்னைய ஜனாதிபதியின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களையே இவர் தனது பாதுகாவலர்களாக ஏற்றுக்கொண்டார். மகிந்த ராஜபக்சவினால் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கு 9 வருடங்களாக பாதுகாப்பு அளித்து வருபவர்களே சிறிசேனவிற்கும் பாதுகாப்பை அளிக்கின்றனர்.

ராஜபக்ச காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மீது பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை  நன்கு தெரிந்த விடயம்,அவர்கள் சட்டத்திற்கு புறம்பபான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த ஓன்பது வருடங்களாக எஸ்எம் விக்கிரமசிங்க என்பவரே ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியாற்றியிருந்தார். பொலனறுவையை சேர்ந்த அவர் தற்போதும் அதே பதவியை வகிக்கின்றார். இது குறித்து பலர் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சிலர் சிறிசேனவிடம் கேள்வி எழுப்பிய வேளை அவர் குறிப்பிட்ட அதிகாரி தான் ராஜபக்சவால் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்ததாலேயே அவரை தொடர்ந்தும் பணியில் வைத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், படையினர் பொலிஸார் மத்தியில் சிறிய மாற்றமும் ஏற்படாததை புலப்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் உருவான சீரழிவு தற்போதும் தொடர்வதுடன் அது ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.

2 comments:

  1. சொல்வதில் அல்லது அறிக்கை விடுவதில் எந்த பிரயோசனமும் ஏற்படுவது இல்லை. மாறாக அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் நம்பிக்கையான பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவரை பாதுகாக்கலாம்.
    நான் முஸ்லிம் எனவே அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன் அவரை பாதுகாத்து இலங்கையில் நல்லாட்சி பெற அருள் புரிய வேண்டுகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.