Header Ads



பட்டையை கிளப்பும் (படம் - இணைப்பு)


இங்கிலாந்தில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுக்க அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

’ஈஸி ஜெட்’ விமான சேவை  நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் போட்டு ஒட்ட, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணியான ஆடம்வுட் இந்த காட்சியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவேற்ற அதை பல்லாயிரம் பேர் பார்த்து தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ரீடுவீட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர், ”இது உயரத்தில் பறக்கும் போது அதி வேகமான காற்று பட்டு விமானத்தின் பாகங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக வழக்கமாக செய்யப்படும் ஏற்பாடுதான்” என்று விமான நிறுவனம் ஆடம்வுட்டின் ட்விட்டர் கணக்கிலேயே பதில் சொல்ல இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

No comments

Powered by Blogger.