Header Ads



மைத்திரியின் திடமான கருத்து குறித்து, பங்காளிகள் மஹிந்தவிடம் எடுத்துரைப்பு..!

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை அப­ய­ராம விகா­ரையில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

இதன்­போதும் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வது, தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது மற்றும் தேர்­தலில் மஹிந்­தவை கள­மி­றக்­கு­வது என்பன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது மற்றும் தேர்தல் முறைமையில் மற்றம் கொண்டுவருவது தொடர்பில் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்ற ஜனாதிபதியின் திடமான கருத்துத் தொடர்பிலும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துக்கூறியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்தியக் குழுவைக் கூட்டி இவ்விடயம் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்கலாம் என்ற தொனியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கருத்துத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.