Header Ads



கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம், ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு வெல்லம்பிட்டிய வித்தியாவர்த்தன சிங்கள வித்தியாலயத்தில் தற்போது (இன்று ஞாயிற்றுக் கிழமை) சம்மேளனத்தின் தலைவர் சாமசிறி ஐ.வை.எம். ஹனீப் தலைமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் வெல்லம்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி தர்மதாஸ கொலன்னாவ விமலராம விகாராதிபதி லபுதலே சுதர்ஷன தேரர், இஹ்ஸானியா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் பாறுக் மௌலவி, கொலன்னாவ புனித ஜோசப் தேவாலயத்தின் அருட் தந்தை ஜூட் கிரிசாந்த, சிவில் பாதுகாப்புச் சபையின் தலைவர் டி.என்.எம். பத்திரன, வை.எம்.எம்.ஏயின் பிரதிநிதி தாசிம், தேசிய இரத்த வங்கியின் உதய பெரேரா மற்றும் இரத்த வங்கியின் வைத்தியர்கள், தாதியர்கள், தொழிலதிபர் எம்.இஸட். பெரோஸ் சங்கத்தின் செயலாளர் பாறுக் றஹீம் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மூவின சமுகத்தைச் சேர்ந்தவர்களும் தேசிய இரத்த வங்கிக்கு இரத்ததானம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. (ஜப்னா முஸ்லிம் விரும்பினால், இதனை தனி ஆக்கமாகவே வெளியிடலாம், இது விளிப்பூட்டலுக்கு உதவும்.)

    ஒரு முக்கிய வேண்டுகோள் : தற்பொழுது நாட்டில் யுத்தம் இல்லை. விபத்துக்களின் பொழுது மட்டுமே அவசரமாக, இரத்த வங்கியில் இருந்து இரத்தம் தேவைப்படும். முன்கூட்டியே திட்டமிடப்படும் சத்திர சிகிச்சை என்றால், உரியவரின் குடும்பத்தவரிடம் தேவைக்கும் அதிகமான குருதியை வைத்தியசாலைகள் பெற்றுக் கொள்ளும்.

    சேமிக்கப் பட்ட குருதி உறை நிலையில் ஒரு வருடத்திற்கு மட்டுமே பாதுக்ககப்பட முடியும், அதிலும் குறிப்பாக அதன் உச்ச பயன்பாட்டுக் காலம் வெறும் 6 வாரங்கள் மட்டுமே. 6 வாரங்களின் பின்னர் சேமிக்கப்பட்ட குருதியின் தரம் குன்ற ஆரம்பிக்கும், ஒரு வருடத்தை நெருங்கும் பொழுது, அது மீண்டும் ஏற்றப்பட முடியாத நிலையை அடையும்.

    இந்நிலையில், இரத்த தானம் மூலம் பெருமளவில் வழங்கப்படும் குருதி எவ்வகையில் பயன்படுத்தப் படுகின்றது என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

    பெரும்பாலான மக்கள், இரத்தம் வழங்கும் பொழுது, பெரும் தியாகம் ஒன்றை செய்யும் மனநிலையுடன் அதில் பங்குபெறுகின்றனர், எனினும், அந்த குருதி எந்த முறையில் பயன்படுத்தப் படுகின்றது என்பது குறித்து யாரும் அக்கறை எடுப்பதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.