Header Ads



சுதந்திர கட்சியின் நலனுக்காக, மகிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன் - மைத்திரி

தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் ஸ்ரீ.சு.கவின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே மகிந்தவுடனான கலந்துரையாடலுக்கும் சம்மதம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மே தின பேரணியில் கலந்துக்கொள்ளுமாறு கட்சி செயலாளர் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் அதனையும் புறக்கணித்தார்.

அதனால் தான் எனக்கும் மகிந்தவிற்கும் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்கள் கட்சியினை மனதில் கொண்டே நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

எனவே கட்சியின் நலனுக்காக எதிர்வரும் நாட்களில் மகிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. நல்லவனோடு சேர்ந்தால் நல்லவனாகலாம். கெட்டவனோடு சேர்ந்தால் கெட்டவனாகலாம். இதற்கு நல்லதொரு உதாரணத்தை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 'நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவனையும், கொல்லனையும் போன்றாகும். கஸ்தூரி வைத்திருப்பவன் அதிலிருந்து உனக்குத் தரலாம், அல்லது நீ அவனிடமிருந்து விலைக்கு வாங்கலாம், அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம், ஆனால் கொல்லனோ அவனின் உலை உம்முடைய ஆடையை எரித்து விடலாம், அல்லது அவனிடமிருந்து துர் வாடையைத்தான் நீ பெற்றுக் கொள்வாய்''

    ReplyDelete
  2. நல்லவனோடு சேர்ந்தால் நல்லவனாகலாம். கெட்டவனோடு சேர்ந்தால் கெட்டவனாகலாம். இதற்கு நல்லதொரு உதாரணத்தை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 'நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவனையும், கொல்லனையும் போன்றாகும். கஸ்தூரி வைத்திருப்பவன் அதிலிருந்து உனக்குத் தரலாம், அல்லது நீ அவனிடமிருந்து விலைக்கு வாங்கலாம், அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம், ஆனால் கொல்லனோ அவனின் உலை உம்முடைய ஆடையை எரித்து விடலாம், அல்லது அவனிடமிருந்து துர் வாடையைத்தான் நீ பெற்றுக் கொள்வாய்''

    ReplyDelete
  3. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் மகிந்தவின் பணியிலேயே அவரை கையாள்வதில் மிகவும் நேர்த்தியானவர்தான் இந்த my3. நாம் நினைப்பது சரியானால், இதுதான் சரியான அரசியல் காய்நகர்த்தல். தேர்தல் வரும் வரை ஒரு இலக்கை நோக்கி அழைத்து சென்று கலட்டி விட்டால் திரும்பி வருவதற்கு காலாவகாசம் கிடைக்காது.

    ReplyDelete
  4. மகிந்த எப்பொழுது வேண்டுமானாலும் கலை வாரலாம்....

    ReplyDelete
  5. அவரை அவருடைய பாட்டில் விட்டுவிடுங்க. சந்திரிக்கா அம்மையாருக்கு நடந்ததை கொஞ்சம் நினைத்துப் பாருங்க. இல்லாவிட்டால் உங்களுக்கும் அதே கதி தான். ரோட்டுல போகிற பாம்பைத் தூக்கி மடியில் போட்ட கதைதான்.

    ReplyDelete

Powered by Blogger.