Header Ads



மஹிந்த அரசியலுக்கு வந்தால் SLFP உடைந்து, தம்மால் வெல்ல முடியுமென UNP கணக்குப்போடுகின்றது

இந்­திய பிர­தமர் இலங்கை வரும்­போது வடக்­குக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் செல்­லலாம். ஆனால் அவர் வடக்குக்கு சென்று என்ன பேசப்­போ­கின்றார் என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விடயம். இந்­தியா, சீனாவை விட எமது பாது­காப்பும் வளங்­களும் முக்­கி­ய­மா­ன­வை­யா­கும்­என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் தூய்­மை­யா­ன­தொரு நாளை அமைப்பின் தலை­வ­ரு­மான அத்­து­ர­லிய ரத்­ன தேரர் தெரி­வித்தார்.

இந்­திய பிர­தமர் மோடியின் இலங்கை வரு­கை­யின்­போது எவ்­வா­றான உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டப்­போ­கின்­றன என்­பது குறித்து நாம் அறிந்­தி­ருக்­க­வேண்டும். சீபா போன்ற மற்­று­மொரு உடன்­ப­டிக்­கை­க்கும் அனல் மின்­நி­லைய உடன்­ப­டிக்­கைக்கும் இந்­தியா தயா­ரா­வ­தாக தெரி­கின்­றது. இந்­தியா, சீனா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­களின் உபாய ரீதி­யான செயற்­பாட்­டுக்குள் எமது நாடு சிக்­கி­வி­டக்­கூ­டாது என்றும் தேரர் குறிப்­பிட்டார்.

மேலும் ஜனா­தி­ப­தி­யையும் பாரா­ளு­மன்ற உறு­ப்­பி­னர்­க­ளையும் ஒரே தேர்­தலில் தெரிவு செய்யும் மாற்­றங்கள் அவ­சியம். அத்­துடன் விருப்­பு­வாக்கு முறை­யற்ற தேர்தல் முறை கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற சமூக நீதிக்­கான அமைப்பின் தொழில்சார் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அத்­து­ர­லியே ரத்­தன தேரர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் மிகவும் முக்­கி­ய­மான கால கட்­டத்தில் நாங்கள் இருக்­கின்றோம். சீனா இந்­தியா போன்ற நாடு­களும் மேற்­கு­லக நாடு­களும் எமது நாட்டில் தமது உபாய ரீதி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர்.

எமது நாட்­டுக்கு தெற்­கே­யுள்ள மாலை தீவில் இந்­தி­யாவின் உத­வி­யுடன் பத­வியில் இருந்த ஜனா­தி­ப­தியை நீக்­கி­விட்டு அமெ­ரிக்கா பாது­காப்பு நிலையம் ஒன்றை அமைத்­துள்­ளது. இந­நி­லையில் இலங்கை இன்று பல நாடு­களின் உபாய ரீதி­யான தேவைக்­கான செல்­வாக்கு மிக்க நாடாக உள்­ளது. துறை­முகம் மற்றும் எரி­சக்தி ரீதியில் இந்­தியா உபாய ரீதி­யான செயற்­பா­டு­களை இலங்­கையில் முன்­னெ­டுக்­கலாம்.

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தற்­போது காணப்­ப­டு­கின்ற சீபா போன்று மற்­று­மொரு உடன்­ப­டிக்­கையை இந்­தியா இலங்­கை­யுடன் முன்­னெ­டுக்­கலாம். குளி­ரூட்­டப்­பட்ட அறை­களில் இதற்­கான பேச்­சுக்கள் இடம்­பெ­று­கின்­றன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யா­வுக்கு செல்­கின்றார்.

இந்­திய பிர­தமர் மோடி இலங்கை வரு­கின்றார். மேலும் இலங்­கையில் அடுத்த ஆட்­சியில் அம­ரப்­போ­வது யார் என்­பது தொடர்பில் ஆரா­யப்­ப­டு­கின்­றது. எனவே இவ்­வா­றான சர்­வ­தேச ரீதி­யான உபாய செயற்­பா­டு­க­ளுக்கு இடையில் எமது நாட்டின் தேசிய பாது­காப்பு மற்றும் வளங்­களை பாது­காப்­பது தொடர்பில் நாங்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்டும்.

குறிப்­பாக இந்­திய பிர­தமர் மோடியின் இலங்கை வரு­கை­யின்­போது எவ்­வா­றான உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டப்­போ­கின்­றன என்­பது குறித்து நாம் அறிந்­தி­ருக்­க­வேண்டும். அனல் மின்­நி­லையம் ஒன்­றுக்­கான உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் தேவை­யா­னதை இங்கு செய்ய முடி­யாது. இந்­தி­யாவின் நகர்­வுகள் குறித்து நாம் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். அறை­களில் திருட்­டுத்­த­ன­மாக பேச்­சு­வார்த்தை நடத்தி எமது நாட்டின் தேசிய பாது­காப்­பையும் வளத்­தையும் விற்க இட­ம­ளிக்க முடி­யாது.

இந்­திய பிர­தமர் இலங்கை வரும்­போது வடக்­குக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் செல்­லலாம். ஆனால் அவர் வடக்கு சென்று என்ன பேசப்­போ­கின்றார் என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விடயம். இந்­தியா சீனாவை விட எமது பாது­காப்பும் வளங்­களும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.

தற்­போது புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் திட்டம் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. இதில் பல விட­யங்கள் உள்­ளன. எவ்­வா­றெ­னினும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் மற்றும் ஊழ­லுக்கு எதி­ராக விசா­ர­ணைகள் என்­பன கட்­டாயம் இடம்­பெ­ற­வேண்டும். ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைக்க ஐக­கிய தேசிய கட்­சிக்கு தேவை உள்­ளது. காரணம் அடுத்த தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்­சி­ய­மைக்க அந்தக் கட்சி முயற்­சிக்­கின்­றது. ஆனால் இந்த விட­யத்தில் சுதந்­திரக் கட்சி வேறு நிலைப்­பாட்டில் உள்­ளது. இந்த இரண்டு விட­யங்­க­ளுக்­குள்ளும் சிக்­கி­வி­டாமல் நாம் இருக்­க­வேண்டும்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையில் உள்ள பாத­க­மான விட­யங்கள் எமக்குத் தெரியும். பாரா­ளு­மன்­றத்­தக்கு பொறுப்­புக்­கூ­றாத சர்­வா­தி­காரி போன்ற செயற்­ப­டு­கின்ற பல விட­யங்கள் உள்­ளன. எவ்­வா­றெ­னினும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாத வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கே நா்ஙகள் செல்­ல­வேண்­டி­யுள்­ளது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வேண்டும்.

ஆனால் இந்த ஜனா­தி­பதி முறை மாற்­றத்­துடன் தேர்தல் முறை மாற்­றமும் தொடர்­பு­பட்­டுள்­ளது. எனவே தேர்தல் முறையை மாற்­றி­ய­மைக்­க­வேண்டும். ஆனால் முழு­மை­யாக தொகுதி முறைக்கு செல்ல முடி­யாது. மாறாக விருப்பு வாக்கு முறை­மை­யற்ற தேர்தல் முறைமை ஒன்­றுக்கு செல்­ல­வேண்டும். ஆனால் இதற்கு தீர்­வாக கலப்பு தேர்தல் முறை வராது. மாறாக விருப்பு வாக்கு அற்ற தேர்தல் முறை வரும். மேலும் தேர்தல் முறை மாற்­ற­மா­னது குறி­ப­பாக ஜனா­தி­பதி தெரிவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவும் ஒரே தட­வையில் அமை­ய­வேண்டும். அப்­போ­துதான் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜனா­தி­ப­தியின் ஆதிக்­கத்தை குறைக்­கலாம்.

கடந்த காலங்­களில் ஊழலில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதனை மாற்ற முடி­யாது. போதைப்­பொருள் கொண்­டு­வந்­த­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். இல்­லா­விடின் அது தவ­றான உதா­ர­ண­மா­கி­விடும்.

இந்த ஊழ­லுக்கு எதி­ரான தண்­டனை வழங்கும் செயற்­பாட்டில் அர­சியல் கட்­சிகள் தமது சுய அரசியல் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கின்றன. அதாவது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வந்தால் சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்துவிடும் என்றும் அப்போது தம்மால் வெற்றிபெற முடியும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி கணக்குப்போடுகின்றது. இதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கியுள்ளனர். பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மொணராகலை உள்நாட்டு பால் உற்பத்தியாளர் இன்று பாரியளவில் பாதிக்க்ப்பட்டுள்ளார். இது தொட்ர்பில் கவனம் எடுக்கவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.