Header Ads



ஜனாதிபதி, பிரதமர் இடையே முரண்பாடா..? இணக்கப்பாடா..??

பாரா­ளு­மன்­றத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைத்­து­விட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை பிர­தான இரு ­கட்­சி­களும் மேற்­கொண்டு வரு­வ­துடன் ஆங்­காங்கே பிர­சார வேலைத்­திட்­டங்­களும் மேற்கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட நூறு நாள் வேலைத்­தி­ட்ட­மா­னது எதிர்­வரும் ஏப்ரல் 23ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் ஏப்­ரலில் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­து­விட்டு ஜூன் மாதம் தேர்­தலை நடத்­து­வது தொடர்பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்­கி­டையில் இணக்­கப்­பா­டொன்று ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் மேலும் தெரி­விக்­கின்­றன.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான சகல வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் கட்சி வட்­டா­ரங்கள் குறிப்­பி­டு­கின்­றன. அதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியும் எதிர்­வரும் பொதுத் தேர்­த­லுக்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்டு வரு­வ­துடன், தம்­மோடு இணைந்து போட்­டி­யி­ட­வுள்ள சிறு­பான்மைக் கட்­சி­க­ளு­டனும் கலந்­தா­லோ­சித்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, எதிர்­வரும் 23ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது தற்­போ­துள்ள தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்­காமல் பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு தனக்கு இணக்­க­மில்லை என அண்­மையில் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்றும் நூறு நாள் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டினை மேற்கொண்டதாகவும் அதற்காக அந்தக் கட்சியின் பின்னால் செல்லவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜாதிக ஹெல உறுமய அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்இ ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் ௨௩ ஆம் திகதியுடன் இந்த அரசுக்கான ஒட்சிசன் நிறைவடைவதாகவும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறும் கேட்டிருந்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெ ளிவந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் தேர்தலை ஜூன் மாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏலவே கூறியதுபோன்று தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் வலியுறுத்தி வருகின்றது.

No comments

Powered by Blogger.