Header Ads



'கூட்டு இராணுவப் படை' அமைக்க அரபுலகத் தலைவர்கள் இணக்கம்

-bbc-

அரபுலகத் தலைவர்கள் கூட்டு இராணுவப் படை ஒன்றை உருவாக்க இணங்கியுள்ளதாக எகிப்திய அதிபர் அப்துல் ஃபட்டா அல் -ஸீஸீ கூறுகின்றார்.
பிராந்தியத்தில் எதிர்நோக்கப்படும் 'எதிர்பாராத அச்சுறுத்தல்களுக்கு' முகம்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த இராணுவப் படையை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யேமனில் நிலவும் குழப்பங்கள் தொடர்பில் பெரும்பாலும் ஆராயப்பட்ட அரபு லீக் மாநாட்டில் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.

யேமனில் தற்போது ஹெளதி- ஷியா முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு அரபுப் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

ஹௌதிகள் ஆயுதங்களை மீள கீழே வைத்துவிட்டு அவர்கள் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியிலிருந்து வெளியேறும்வரை தங்களின் படைநடவடிக்கை தொடரும் என்று அரபு லீக் கூறியுள்ளது.

யேமனில் ஹௌதி இலக்குகள் மீது நான்காவது இரவாக சவுதி தலைமையிலான வான்தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துள்ளன.

1 comment:

  1. இந்த கூட்டமைப்பின் நோக்கம் வெறும் ஆதிக்க வெறியே ஆகும். கரப்பொத்தானை மிதித்துக் கொல்ல கூட்டு இராணுவப் படை அமைப்பவர்கள், இஸ்ரவேலைக் கண்டால், காணாமல் போய்விடுகின்றனர்.

    முடிந்தால் இஸ்ரவேல் மீது ஒரு தோட்டா சுட்டுப் பார்க்கட்டும், செய்யவே மாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.