Header Ads



கிழக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, மற்றுமொருவரை பரிந்துரைக்கவுள்ளோம் - விமலவீர

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் மாற்று முதலமைச்சர் ஒருவரை பரிந்துரைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்படிக்கையை புதிய முதலமைச்சர் மீறியுள்ளார். அமைச்சர்களை நியமிக்கும் விடையத்திலேயே இந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளது.

எனவே அவரை நீக்கும் வகையில் மாற்று முதலமைச்சர் ஒருவரை பரிந்துரைக்கவுள்ளதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த பரிந்துரைக்கு கூட்டமைப்பின் 9 உறுப்பினர்கள் ஆதரவு வெளியிட்டுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணசபையின் 4 அமைச்சர்கள் நேற்று அமைச்சர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.