Header Ads



சட்டத்தை கையில் எடுத்த ஞானசாரர், நல்லாட்சி மைத்திரி அரசாங்கம் வேடிக்கை பார்ப்பு

முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட­வேண்டும். என தெரி­விக்கும் ஞான­சார தேரர் முகம் மூடிய முஸ்லிம் உடை­க­ளுக்கு தடை விதிக்­கா­த­வரை யாரும் தலைக்­க­வச சட்­டத்­தினை பின்­பற்ற வேண்டாம் எனவும் குறிப்­பிட்டார்.

பொது பலசேனா பெளத்த அமைப்­பினால் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் தலைக்­க­வச சட்டம் தொடர்பில் வின­வி­ய­போது அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இவ்வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது.

தேசிய பாது­காப்பு தொடர்பில் நாம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பேசி வரு­கின்றோம். ஆனால் இன்று புதிய அரசு விசித்­தி­ர­மான சட்­டங்­களை கொண்டு வந்து தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. முழு­மை­யாக முகத்தை மூடிய தலைக்­க­வசம் அணி­வதை தடுக்க வேண்டும் எனக் கோரி புதிய சட்டம் இயற்­றி­யுள்ள இவர்கள் ஏன் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், பர்தா உடை­க­ளுக்கு தடைவிதிக்கவில்லை. தலை­க­வசம் அணிந்து தப்பு செய்­கி­றவர் யார் என்­பதை கவ­சத்தை கழட்டி பார்க்க முடியும். ஆனால் நிகாப் பர்தா உடை­க­ளினுள் இருப்­பர்கள் யார் என்­பதை எவ்­வாறு அவ­தா­னிப்­பது.

கடந்த காலங்­களில் இவ்­வ­கை­யான ஆடை­களை பயன் படுத்­தியே இலங்­கையில் பல குற்­றங்கள் இடம்­பெற்­றன. மாமா, அஸ்மின் போன்ற குற்­ற­வா­ளிகள் இவ்­வகை உடை­யினுள் ஒளிந்­தி­ருந்தே தப்­பித்து வந்­தனர். எனவே தலைக்­க­வசம் தொடர்பில் சட்டம் கொண்­டு­வந்து முழு­மை­யாக முகத்தை மூடிய தலைக்­க­வசம் அணி­வதை தடை செய்­வ­தாயின் அதே சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, பர்தா வகை உடை­க­ளையும் தடை செய்து பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும். சட்டம் என்­பது அனை­வ­ருக்கும் அனைத்து வகை­யிலும் பொருந்தக் கூடிய வகையில் அமை­யப்­பெற வேண்டும். மத சார்பில் ஒரு சில­ருக்கு சாதகமாகவும் ஏனை­யோ­ருக்கு வேறு விதத்தில் சட்டம் இயற்­று­வது ஏற்றுக் கொள்ள முடி­யாது.

முஸ்லிம் தீவி­ர­வா­தத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்து நாட்டை சிறிது காலத்­தி­லேயே இஸ்­லா­மிய தேச­மாக்கும் செயற்­பாடு மறை­மு­க­மாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. பிர­பா­கரன் வடக்கை மட்­டுமே கோரி போரா­டினார்.

ஆனால் முஸ்லிம் தீவி­ர­வாதம் மிகவும் மோச­மாக அமை­தி­யாக இருந்து காய் நகர்த்தி முஸ்லிம் மத வாதத்­தி­னையும் யதார்த்­தத்­திற்கு அப்­பாற்­பட்ட கொள்­கை­க­ளையும் பரப்பி சிங்­கள கொள்­கை­களை அழிக்­கின்­றனர்.

எனவே முகத்­தினை முழு­மை­யாக மூடுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வரப்­ப­டு­மாயின் முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடிய ஆடைகளையும் தடை செய்ய வேண்டும். அதை நடைமுறைப் படுத்தும் வரையில் இளைஞர்கள் யாரும் இச் சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

4 comments:

  1. அஞ்ஞான சேரையின் சிவுரையும் தடை செய்ய வேண்டும். அதற்குள் எத்தனை மது போத்தல்கள், கஞ்சா, ஹெரோயின், கருத்தடை மாத்திரைகள் உள்ளனவோ யாருக்குத் தெரியும். இவருக்கு ஒரு டீ சேர்ட்டும், ஜம்பரும் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
    வாய் அறிக்கை விட்டு விட்டு இந்த அரசாங்கமும் சும்மா இருக்காது இந்த பிச்சு நாயைக் கொண்டு போய் அடைக்க வேண்டியது தானே. எங்கே ரிசாத் பதியுதீன்? எங்கே அசாத் சாலி? எங்கே ரவுப் ஹகீம்? எங்கே ஹலீம்? எங்கே மற்ற முஸ்லிம் அமைச்சர்கள்?? அழுத்தம் கொடுத்து கூண்டில் அடைக்க வேண்டும். தாமதம் அதிகரித்த பின்பு தலைக்கு மேல் அணை பாய்ந்துவிடுபதைத் தவிர்க்க முடியாது.

    ReplyDelete
  2. Where is MY3 Govt;? Why don't the authorities arrest this
    Person who challenges the law of the land?

    ReplyDelete
  3. நான் சிரமப்பட்டு இங்கே வெளிப்படுத்திய எனது கருத்து பிரசுரமாகவில்லை. இது, கோத்தபாய வெள்ளை வேன் வைத்து கடத்திக் கொலை செய்ததற்கு ஒப்பான செயல் ஆகும்.

    யாழ் முஸ்லிம் எனது கருத்துக்களை அனுமதிக்கும் விடயத்தில் தொடர்ந்தும் மோசமாக செயற்பட்டு வருகின்றது. கருத்துக்கள் என்று வருமிடத்து, மோசமான வார்த்தைகள், தனிப்பட்ட குரிதத்தை மையமாக கொண்ட தாக்குதல்கள் தவிர்ந்த ஏனையவற்றை பிரசுரிக்க வேண்டியது யாழ் முஸ்லிமின் பொறுப்பாகும்.

    யாழ் முஸ்லிம் நினைப்பது போன்றும், யாழ் முஸ்லிம் சிந்திப்பது போன்றுமே எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்ற செயலும், கருத்துச் சுதந்திர மறுப்பும், ஊடக தர்மத்திற்கு எதிரான ஒன்றுமாகும்.

    எனது கருத்துக்கள் உங்கள் சிந்தனைக்கு ஏற்றவையாக இல்லை என்றால், மாற்றுக் கருத்து/ மறுப்பு முன்வைக்க உங்களுக்கும் இடமுள்ளது.

    எனது சிந்தனையையும், கருத்து வெளிப்பாட்டையும் அல்லாஹ்தான் ஏற்படுத்தித் தந்துள்ளான், ஆகவே நீங்கள் எனது கருத்துக்களை பிரசுரிக்காமல் மறுப்பது, அல்லாஹ் ஏற்படுத்திய கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும்.

    யாழ் முஸ்லிம் தடை செய்யப்பட்டு இருந்த காலத்தில் கூட proxy மூலம் வாசித்து வந்த என்போன்ற வாசகர்களுக்கு கருத்துக்களை பதியக் கூட சந்தர்ப்பம் தராமல் இருப்பது ஊடக அராஜகம் ஆகும்.

    ReplyDelete
  4. இவன் ஒரு காவி யூதன் இவனை உடனே கைது பண்ண வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.