Header Ads



'மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர, மேற்கொள்ளும் முயற்சி நியாயமற்றது'

முன்னய அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த சிறு குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி நியாயமற்றது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அது சம்பிரதாயங்களுக்கு புறம்பானது என ஜே.வி.பியினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த மாதயிறுதியில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட்டு ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகித்த சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இப்போது இருக்கின்ற நிலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்களாயின் அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும்.

எனவே, தற்போதிருக்கின்ற பெரும்பான்மையை தக்கவைத்துக்கொண்டே நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முயற்சிக்கிறார்கள்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பல அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த குழுவில் இருக்கின்றமை எதிர்கால அரசியலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.