Header Ads



மகிந்த ராஜபக்ஸ தோற்பார், என்பதை முன்னரே அறிந்திருந்தேன் - பௌசி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என தான் முன்னரே அறிந்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் எதிராகவே காணப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றது ஏன் தேர்தலுக்கு போகிறீர்கள் என சிலர் கேட்டனர். தேர்தலுக்கு சென்று நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் தோற்பார் என்பதை நான் அறிந்திருந்தேன். 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக இருந்ததே இதற்கு காரணம், தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளும் இல்லாமல் போனது எனவும் பௌசி கூறியுள்ளார்.

3 comments:

  1. You knew Muslims are not on your side.But why then you took the responsibility of
    Haj committee ? If you knew you are not only for Muslims,that's fine but why give the
    impression that you are a Muslim leader ? Tell the Muslims that you are not only for
    Muslims so that Muslims will not expect much from you.

    ReplyDelete
  2. அப்படியென்றால் மகிந்தர் சுமார் பத்து இலட்சம் கள்ள வாக்கில் தான் அந்தளவு வாக்கைப் பெற்று தோழ்வியுற்றுள்ளாரோ???

    ReplyDelete
  3. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தானே.........

    ReplyDelete

Powered by Blogger.