Header Ads



மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்யுமா மு.கா..?

(லாகிர் நப்ரிஸ்)

நடைபெற்று முடிந்தது நன்றாகவே நடந்து முடிந்தது, நடைபெறலாம் என்று எதிர்பார்க்கும் எல்லாம் நன்றாகவே நடக்கும் என்ற ஒரு ஆழமான சிந்தனை கருவின் வெளிப்பாட்டின் அடிப்டையில் ஜனாதிபதி மைத்திரிபாலாவின் 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதல் கட்ட  மக்கள் நிவாரணம் எரிபொருட்களின் விலைகுறைப்பு கடந்தவாரம் அமுல்படுத்தப்பட்டது இன்று முதல் 13 அத்தியவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மைத்திரி யுகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு அதுக்கான பலன்களை  இனிவரும் காலங்களில் மக்கள் அனுபவிக்கலாம்.

குழம்பி போயிருக்கும் மைத்திரி

இலங்கையில் காணப்படும் கணிசமான  மாகாணசபைகளிள் ஆட்சி மாற்றம் நடை பெற்றுகொண்டிருக்கின்றது. இதன் முதல் கட்டமாக ஊவா மாகாண சபை முதல் அமைச்சர் பதவி தற்போது ஐ.தே.க இன் வசம் ஆகியுள்ளது. இருப்பினும் கிழக்கு மாகாணத்தில் இருந்து முதல் அமைச்சர் என்ற ஒரு பூதம் கிளம்பி  மைத்ரி தலைமையில்லான ஆளும் கட்சிக்கு ஒரு இக்கட்டான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் குழம்பி போயிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரி அவர்கள்.  நடைபெற்று முடிந்த இலங்கையின் 6 வது ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி அவர்களின் வெற்றியில் முக்கிய பங்குதாரர்கள் சிறுபாண்மை மக்கள் ஆகிய முஸ்லிம் ,மற்றும் தமிழ் மக்கள். இவர்களின் அமோக வாக்குகளால்தான் ஜனாதிபதி மைத்திரி அவர்களின் வெற்றி உறுதிபடுத்தபட்டது.இந்த கிழக்கு மாகணசபை முதல் அமைச்சர் என்ற ஒரு இடியப்ப சிக்களில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் அகப்பட்டுள்ளார். காரணம் இலங்கை சிறுபாண்மை மக்களின் அதிக வாக்குகளை கொண்ட இரு பிரதான கட்சிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும். இந்த இரு சிறுபாண்மை கட்சிகளின் ஆதரவில்தான் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானார்.இந்த கிழக்கு முதல் அமைச்சர் என்ற ஒரு பதவிக்காக இந்த இரு சிறுபாண்மை கட்சிகள் தற்போது நீயா ? நானா ? அல்லது முஸ்லிமா ? தமிழனா ? என்ற ஒரு உச்சகட்ட அரசியல் போருக்கு தயார்படுத்திக்கொண்டிருகின்றனர். இதன் ஆரம்ப கட்டமாக இரு கட்சிகளும் இடையில் கடந்த வாரம் மூன்று முறை சந்திப்புக்கள் நடைபெற்று ஒரு தீர்வும் எட்டப்படாத ஒரு நிலையில் முடிவடைந்தது. த.தே.கூ கிழக்கு மாகாணசபையில் தற்போது அதிக மாகாணசபை உறுபினர்களை (11)  கொண்ட ஒரு கட்சியாக இருகின்றது. இதனால் தமிழர் ஒருவர்தான் கிழக்கு மாகாணசபை முதல் அமிச்சர்ராக வரவேண்டும் என்று நான் பிடித்த முயலுக்கு நான்கு கால் என்று பிடிவாதம் பிடிக்கிறது. மறுபக்கம் ஸ்ரீ.மு.கா முஸ்லிம் ஒருவர்தான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று கங்கணம்கற்றிகொன்று நிக்கிறது. மொத்தத்தில் யாரும் விட்டுகொடுப்பதாக தெரியவில்லை இறுதியில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகான த.தே.கூ யின் தலைவர் இராசம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தனித்தனியாக சந்திப்புகளை ஏற்படுத்தினர்.இதன் போது தங்களின் ஆதங்களை வெளிபடுத்தினார்கள். த.தே.கூ க்கு கிழக்கு முதல் அமைச்சர் பதவி பெற்றுகொள்ள தனது பக்கத்தின் நியாத்தை எடுத்துரைத்தனர். ஆனால் அவர்களோ பாப்போம் என்று கூறி அவர்களை வளியனுப்பி வைத்தனர். மறுநாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டார் அதாவது தான் மாகாணசபை சபை ஆட்சி விடயங்களில் தலையிடபோவதில்லை என்று தெரிவித்தார் இதனால் ஜனாதிபதி மைத்திரி அவர்களும் , பிரதமர் ரணில் அவர்களும் இலகுவாக இந்த கிழக்கு முதல் அமைச்சர் பிரச்சினையில் இருந்து நழுவிக்கொண்டனர் ஏனென்றால் இந்த கிழக்கு அமைச்சர் என்ற ஒரு விடயத்தினால் ஒரு கட்சிக்கு சார்பாக ஒரு முடிவு எடுப்பதனால் இரு சிறுபான்மை கட்சிகளின்  மற்றும் மக்களின் குரோதத்தையும் ஏற்படுத்தி கொள்ளாமல் நழுவினர். ஒருசிலவேளை வருகின்ற  பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இந்த ஒருபக்க சார்பான முடிவு ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர்கள் நழுவிருக்கலாம்.

மீண்டும் இனவாத கருத்துக்களை கக்கும் பொது பலசேனா

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின்பின் சிங்களபேரினவாத இனவாத அமைப்பான பொதுபலசேனா மீண்டும் இனவாத கருதுக்களை  தென்னிலங்கை மக்களிடம் கக்குகிறது.

சிங்கள கலாச்சாரம் முஸ்லிம் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்டு வருவதாகவும்.ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கலில் அரசு ஈடுபடுவதாகவும்,பிரிவினையை தோற்றுவிக்கும் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும்,ஜனநாயக சாயம் பூசி வடகிழக்குக்குகான தேவைகள் பூர்திசெய்யப்படுவதாகவும்,தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் நாட்டிற்கும் , சிங்கள அமைப்புக்கும் நன்மையைத் தருமென நினைப்பது வெறும் கனவு மட்டுமே , சிங்கள மக்களை அழிக்கவே தற்போதைய தேசிய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.அனைவரையும் ஒன்றினைத்து கூட்டு ஆட்சியினை உருவாக்கி இருப்பது சாதகமென வெளியில் விளம்பரபடுத்துகின்றனர் ஆனால் மறைமுகமாக சர்வதேச சதித்திட்ட நிறைவேற்றபடுகின்றது என்று சிங்கள பெரும்பான்மை மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யபடுகிறது.இனக்குரோதரீதியில் சிறுபான்மை மக்களை சிருமைபடுத்துகின்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் பொதுபலசேனாவின் கருத்தினால மக்கள் மத்தியில் புதிய அரசு எதிர்பாக்கும் நல்லாட்சியை கொண்டுவருவது மிகவும் கடினமாகும்.

கிழக்கு முதல் அமைச்சர் பதவியும் தென்னிலங்கை மக்களும்

2012 ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைபத்துகான வாய்புகள் இருந்தும்  ஸ்ரீ.மு.கா யின் இறுதி முடிவால் நழுவி போனது தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து. அப்போது இருந்த மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கம் ஸ்ரீ.மு,கா எதிராக சில இனவாத கருத்துகளை தென்னிலங்கை மக்களிடம் விதைத்தது. இதனால் அப்போது தென்னிலங்கை மக்கள் மிகவும் அச்சப்பட்டு வாழ்ந்தகாலம் உருவாகியது ஸ்ரீ.மு.கா தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்வதன்மூலம் வடகிழக்கு பகுதிகளில் மீண்டும் புலி பயங்கரவாதம்  உருவாகலாம்  என்ற ஒரு தோற்றபாடு தென்னிலங்கை மக்களிடம் உருவாகியது. ஆனால் அதிஷ்டவசமாக ஸ்ரீ.மு,கா தலைவர் அதனை புரிந்துகொண்டு அப்போதைய மஹிந்த தலைமையில்லான ஆளும் ஸ்ரீ.சு.க க்கு ஆதரவு அளித்தார்.  

கிழக்குமுதல் அமைச்சர் பதவியும் மீண்டும் உருவாக போகும் தென்னிலங்கை இனவாதமும்

அன்றும் இன்றும் தென்னிலங்கை மக்களிடம் இந்த கிழக்கு முதல் அமைச்சர் என்ற அச்சம் உருவாகியள்ளது, தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகணசபைக்கு  முதல் அமைச்சராக வரவேண்டும் எனக் கூறுகின்றனர் ஆனால் இந்த விடயத்தில் மாற்றமாக தமிழ் தேசிய  கூட்டமைப்புத் தலைமையில் தமிழர் ஒருவர்தான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதிபூண்டுள்ளனர். உண்மையில் ஸ்ரீ.மு.கா தமிழ் தேசிய கூட்டமைப்புடுக்கு  கிழக்கு மாகணசபை முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பின் தென்னிலங்கையில் ஒரு இன கலவரம் உருவாகுவற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கிவிடும். தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தி படுத்தும் இந்த கிழக்கு மாகாணசபை முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் விட்டுகொடுப்பின் நிச்சியமாக தென்னிலங்கையில் ஒரு இனகலவரம் உருவாகும். உறங்கி போய்யிருக்கும் சிங்கள மதவாத,இனவாத அமைப்புக்கு இது உந்துசக்தியாக மீண்டும் இருக்கலாம். தென்னிலங்கை பெரும்பாண்மை மக்கள் தற்போதுதான் பொதுபல சேனாவின் கொள்கை பிழையென ஏற்றுகொண்டுள்ளனர் இந்த புதிய அரசியல் மாற்றத்தினால் ஆனால் ஸ்ரீ .மு.கா இந்த கிழக்கு மாகாணசபை முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பதனால் இனவாத அமைப்பான பொதுபல சேனாவுக்கு இந்த கிழக்கு முதல் அமைச்சர் விடயத்தை தென்னிலங்கை மக்களிடம் தூக்கி பிடித்து மீண்டும் இனவாத கருத்தை விதைத்து மீண்டும் ஒரு இனக்கலவரம் இந்த நாட்டில் தெற்கில் இருந்து உருவாகலாம், அப்போது தென்னிலங்கை பெரும்பாண்மை மக்கள் பொதுபல சேனாவின் அடிப்படை கொள்கையை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார். 

கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த இரு வருடகால கிழக்குமாகாண ஆட்சியின்போது முற்றாக அபிவிருத்தி செயட்பாடுகளில் இருந்து முற்றாக நிராகரிக்க படுகிறார்கள் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்ன்றனர் அது முற்றிலும் உண்மைதான் ஆனால் கிழக்கு மாகணசபை முதல் அமைச்சர் பதவியை பெற்றுகொண்டு இதை நிவர்த்திசெய்து கொள்ளலாம் என்ற என்னகரு பிழையானது அதற்கான காலம் இதுவல்ல. தென்னிலங்கை பெரும்பான்மை மக்கள் கிழக்கு மாகாணசபை நகர்வுகளை நன்றாக  அவதானித்து வருகின்றனர். ஸ்ரீ.மு.கா கிழக்கு முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பதனை தவிர்த்து மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்வதை தடுக்கவேண்டும்,100 நாள் வேலைத்திட்டதின் கீழ் புதிய அரசிலிருந்துகொண்டு வரலாற்று தவறு செய்வதை சற்று சிந்தித்து அரசியல் நகர்வுகளை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவேண்டும். இப்படியான செயற்பாடுகள் புதிய அரசின் எதிர்கால திட்டத்திற்கு ஒரு ஆரோக்கியமான விடயம்மல்ல.தமிழ் தேசிய கூட்டமைப்பிடுக்கு கிழக்கு மாகணசபையில் மூன்று அல்லது நான்கு அமைச்சு பதவிகளை வழங்கி கிழக்கு முதல் அமைச்சர் பதவியை ஸ்ரீ.மு.கா தன்வசம் தக்கவைத்து கொள்ள வேண்டும். இதனால் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அபிவிருத்தி வெளிச்சத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கலாம்.ஆகவே ஸ்ரீ.மு.கா மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்வதை புதிய அரசின் பொறுப்புள்ள அமைச்சர் என்றவகையில் தலைவர் ஹக்கீம் அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்பது இலங்கை பெரும்பாண்மையான முஸ்லிம் மக்களின்  எதிர்பார்ப்பு ஆகும்.

1 comment:

  1. கட்டுரையின் இறுதியில் ஒரு யதார்த்தமான நல்ல முடிவு சொல்லப் பட்டாலும்... தெற்கில் இனக்கலவரம் வரும் என்று இந்த முஸ்லிம் சமூகத்தை பயம் காட்டும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ன செய்கிறது??? அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்கிறது????. முஸ்லிம் காங்கிரசின் முதல் கடமை நாட்டில் எந்தப்பகுதியிலும் எந்த இனமும் சுதந்திரமாகவும் அச்சம் இன்றியும் தங்களது சுதந்திரமான அரசியல் கருத்தையும் அரசியல் பங்களிப்பையும் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நியாயத்தை தட்டிக் கேட்கவும், முஸ்லிம்களின் உரிமையை உறுதிபடுத்திக் கொள்வதில் முஸ்லிம் காங்கிரஸ் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.