Header Ads



மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் ஆங்கிலப்பாட அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா..?

(ஏ.எல்.எம். அமீன்)

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியானது தனது கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு முயற்;சிகள் மேற்கொண்டாலும், ஓரு சில தனிப்பட்ட நபர்களினது செல்வாக்குகள் காரணமாக ஆங்கிலப்பாடம் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக பெற்றோர்கள் மனம் குமுறுகின்றனர்.

குறிப்பாக அல்-மனார் பெண்கள் பிரிவும், ஆரம்பப் பிரிவும் ஒன்றாக இயங்கி வருகின்ற அதே நேரம் இங்கு தொடர்ச்சியாக பல்வேறு குறைபாடுகள் பெற்றோர்களினால் சுட்டிக்காட்டப்பட்டும் அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை கல்லூரி நிர்வாகத்தினாலோ அல்லது பாடசாலை அபிவிருத்திச் சபையினாலோ எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

பாராளுமன்றம் கூடுவதனைப்போல் அடிக்கடி பாடசாலை அபிவிருத்திச் சபைக் கூட்டம் நடைபெற்றாலும் அதில் எடுக்கப்படுகின்ற எந்தவொரு தீர்மானமும் இதுவரை அமுல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே, அபிவிருத்திச் சபைச் செயலாளர் தீரமானங்களை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதனை அறிய முடிகின்றது.

குறிப்பாக அல்-மனார் பெண்கள் பிரிவும், ஆரம்பப் பிரிவும் பல ஆங்கில ஆசிரியர்கள் இருந்தும் கூட அவர்களுக்கு முறையான நேரசூசி வழங்கப்படாமலிருப்பதுடன் ஒரு சில ஆசிரியர்கள் அவர்களது முதல் நியமனம் முதல் சுமார் 15 வருடங்களாக அதே இடத்திலேயே கதிரைகளை சூடாக்கிய வண்ணமுள்ளனர்.

இவ்வாறு கவனயீனம் அல்லது அசிரத்தை தொடர்பாக பெற்றார்கள் அதிபரிடம் முறையிட்டாலும் அபிவிருத்திச் சபையினால் இவர்களுக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கமுடியாமலுள்ளது.

மேலும், இது விடயம் தொடர்பில் பல முறை வலயக்கல்விப்பணிப்பாளரிடம் தெரியப்படுத்தினாலும் பாடசாலைக்கு வலயக்கல்விப் பணிப்பாளரை எடுப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் அபிவிருத்திச் சபை (செயலாளர்) தொடர்ந்தும் தடையாக இருந்து வருவதை அறியக்கூடியதாக உள்ளது.

எனவே, தேவையற்ற தடைகள் விலக்கப்பட்டு ஆங்கிலக் கல்வி அபிவிருத்திக்கு தற்போதய அல்-மனார் பாடசாலை அபிவிருத்திச் சபை பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் விரும்புகின்றனர். இத்தனைக்கும் தற்போதய அபிவிருத்திச் சபையானது நீதிமன்றத்தில் வழக்குகள் பேசி தாங்களே தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென உத்தரவு பெற்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.