Header Ads



இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் சத்திய பிரமாணம் (படங்கள்)


இலங்கையின், 44வது பிரதம நீதியரசராக நீதியரசர் கே.ஸ்ரீபவன் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக  ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

1952 பெப்பரவரி மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி கற்றார்.

1978 ஆம் ஆண்டு பதில் அரச சட்டத்தரணியாக செயற்பட்ட அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார்.

1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்தில், அவர் வர்த்தக கற்கை நெறி பட்டத்தை பெற்று கொண்டார்.

2002 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசர் நியமிக்கப்பட்ட கே.ஸ்ரீபவன் 2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு பதில் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

1 comment:

  1. பிரதம நீதியரசராக நீடித்திருக்க தன்னை அனுமதித்தால் இன்றைய அரசின் தேவைக்கு ஏற்றபடி தீர்ப்புகளை வழங்குவேன் என்று கெஞ்சியவரை துரத்திவிட்டு, தகுதியாக ஒரு கனவானை தேர்ந்தெடுத்து அந்த உயர்பதவிக்கு நியமித்திருக்கும் ஜனாதிபதிக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    நீதித்துறை மீதான கௌரவத்தை நாட்டின் முதற்குடிமகனாக நீங்கள் மதிப்பளித்து செயற்படுவது உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.