Header Ads



3 நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த கெசினோ, சூதாட்ட அனுமதி ரத்து

திட்டமிடல் அபிவிருத்தி சட்டமூலத்தின் கீழ் 3 நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த கெசினோ மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இன்று 29-01-2015 உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்.

நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

எமது பொருளாதார ஒழுங்கு பாரியளவில் பின்தங்கியுள்ளது.

நாட்டில் கெசினோ, எதனோல், போதைப்பொருள் பொருளாதாரமே நிலவியது.

குடும்ப ஆட்சியும், நெருங்கிய நண்பர்களினதும், மோசடிக்காரர்களின் பணப்பையை நிரப்பும் பொருளாதார கட்டமைப்பே கடந்த காலங்களில் காணப்பட்டது.

இந்த இருண்ட பொருளாதாரத்தை மூடி மறைப்பதற்காக போலியான தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.
இந்தநிலையில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கெசினோ தொடர்பில் விசேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.