Header Ads



கன்னியா முஸ்லிம்களின் குடியிருப்பு தொடர்பாக, அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் கோரிக்கை

திருகோணமலை பட்டணமும் சூழல் பிரதேச செயலளர் பிரிவுக்குப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று கிராமத்தில் 1960 ம் ஆண்டு காலப்பகுதியில் அஸ்செய்ஹ் அவுலியா ஹாஜா பகுருதீன் ஆன்டகை அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மௌலுது ஓதி தமாம் செய்யப்பட்டு கந்தூரி (அன்னதானம்)வழங்கி வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இவ்வைபவத்துக்கு திருகோணமலை மாவட்டத்துக் கிராமங்களிலிருந்தும் குறிப்பாக ஜமாளியா,சென்றல்ரோட்,என்.சீ.ரோட்,சோனகவாடி மூர்வீதி,பெரியகடை,ஜின்னாநகர்,லிங்கநகர்,பாலையூற்று,மட்கோ,அனுராதபுரசந்தி,கன்டிரோட்,சம்பாலேன்,கணேஸ்லேன்,சீனன்குடாஆலிம்அப்பா ஸியாரம்,நாச்சிக்குடா,மக்குளுத்து,நீரோட்டுமுனை,சின்னம்பிள்ளைச்சேனை,கிண்ணியா,தம்பலகமம்,கந்தளாய்,இக்பால்நகர்,நிலாவெளி,குச்சவெளி,புல்மோட்டை,புடவைக்கட்டு,மூதூர்,தோப்பூர் போன்ற ஊர்களிலிருந்து முஸ்லிம் மக்கள் அலை போன்று திரண்டு வந்து கந்தூரியில் கரந்து சிறப்பிப்பர்.

கன்னியா வெந்நீர் ஊற்று மலை உச்சியில் 100 வருட காலத்திற்கு முன் பழைமை வாய்ந்த அஸ்ஸெய்ஹ் ஹாஜா பகுருதீன் அவுலியா அடங்கப்பட்டுள்ளார்.அந்த சியாரத்தின் நீளம் 40 அடி ஆகும். அதே போன்று அஸ்ஸெய்ஹ் ஹாஜாபதுருதீன் வளர்த்த கிளியொன்று மரனமடைந்து அடக்கம் செய்யப்பட்ட இடமும் மலையடிவாரத்தில் கானப்படுகிறது.

இதே போன்று வெந்நீர் ஊற்று கிணறுக்குச் செல்லும் வழியில் பள்ளிவாசலும் ஸியாரமும் உள்ளது.

100 வருட கால பழைமை வாய்ந்த பள்ளிவாசல் கடந்த கால யுத்தத்தின் போது பாலடைந்த நிலையில் இருந்தது. அவற்றைப் புனர்நிர்மானம் செய்து அழகான தோற்றத்தோடு இன்று காட்சி தருகிறது.

கன்னியா வெந்நீர் ஊற்று கிணறு வீதியில் முஸ்லிம் மக்கள் ஆன்டான்டு காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.நாட்டில் ஏற்பட்ட யுத்தம் இப்பிரதேச மக்களையும் இடம் பெயரச் செய்தது.

1989 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறினர் இதற்காக பட்டணமும் சூழல் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் ஒன்றினைக்கப்பட்ட புனர்வாழ்வு புனரமைப்பு நிவாரன திட்டத்திற்கான குடும்ப பதிவு அட்டை வழங்கப்பட்டு நிவாரனமும் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் இங்கு காணிகளைத் துப்பரவு செய்து குடியேற முற்பட்ட வேளையில் திருகோணமலை பிரதேச செயலாளரினால் பொலிஸார் துனையோடு அச்சுறுத்தப்பட்டு இம்மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் வெகுன்டெழுந்த மக்கள் திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி காணியை விட்டகழுமாறு அச்சுறுத்தியமைக்கான காரணத்தை கேட்டார்கள்.இதற்கு பிரதேச செயலாளர் இது அரச காணி அத்துமீற வேண்டாம் என்பதே இவரது வாதமாகும்.  31.12.2009 ம் திகதியிடப்பட்ட கன்னியா வெந்நீர்ஊற்று கிணறு குடியிருப்புக் காணி சம்மந்தமாக மக்கள் மீளக் குடியேற்றத்திற்கு  விண்ணப்பித்தார்கள். ஆனால் முடிவு கிடைக்கவே இல்லை. யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற காரனத்தின் நிமித்தம் கன்னியா மலை உச்சியிலுள்ள ஸியாரத்தைப் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே கன்னியா மலையில் அமையப் பெற்றுள்ள ஸியாரத்தைத் தரிசிப்பதற்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்ஸவிடம் அனுமதி பெற்றுத் தருமாறும் கன்னியா முஸ்லிம்களை மீளக்குடியேற அனுமதியளிக்குமாறும்  திருகோணமலை அனைத்துப்பள்ளிவாசலகள் சம்மேளனம்; கோரிக்கை விடுக்கின்றார்கள். இந்தத் தேர்தல் காலத்தில் இத சாத்தியமாகுமா பொறுத்திருந்து பார்ப்போம்

றபாய்தீன்பாபு ஏ.லத்தீப் 

No comments

Powered by Blogger.