Header Ads



இணைந்து கொள்வதாகத் தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஏன் இணைந்து கொள்ளவில்லை..?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தாமே என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹொரகொல்லவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட ரீதியான முறையில் தம்மை இன்னமும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், ஜனவரி மாதம் 8ம் திகதி பண்டாரநாயக்கவின் பிறந்த நாள் எனவும் அன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி பண்டாரநாயக்க கொள்கைகளை பின்பற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

17 வயதில் சிறிமா பண்டாரநாயக்க காலத்தில் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் கடந்த 47 ஆண்டுகளாக கட்சியில் அங்கம் வகித்து வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது வேறும் கட்சியிலோ இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும், கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்தலில் போட்யிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் போது இணைந்து கொள்வதாகத் தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருவதாகவும், நல்ல நல்ல விளையாட்டுக்களை எதிர்வரும் காலங்களில் பார்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடக்க வேண்டியவை சரியான நேரத்தில் சரியான முறையில் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.