Header Ads



தேர்தலில் வெற்றி பெற்றால், புதிய வரவு செலவு திட்டம் முன் வைக்கப்படும் - UNP


எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றால், புதிய வரவு செலவு திட்டம் ஒன்று முன் வைக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் 22-10-2014 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் பதவி விலக வேண்டும் என அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கோரப்பட்டுள்ளது.

ஜெனீவாவுக்கான இலங்கை வதிவிட பிரதிநிதியின் உத்தியோகபூர்வ இல்ல புனர்நிர்மாண பணிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பிலே பதவி விலக வேண்டும் என அந்த கட்சி கோரியுள்ளது.

அப்போதைய வதிவிட பிரதிநிதியான தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்ண மீது இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தாம், செனுகா தொடர்பில் அல்ல ஒப்பந்தம் தமிழீழ விடுதலை புலிகளுக்கு வழங்கியமை தொடர்பில் நிலவும் குற்றச்சாட்டு குறித்தே கருத்து வெளியிடுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

செனுகா செனவிரட்ணவை பாதுகாப்பதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏன் என அந்த கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரித்தானியாவின் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொனிஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.