Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய உலகமொன்றை உருவாக்கியுள்ளார் - அஸ்வர்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த போது, எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு கிடைத்ததென ஊடகத்துறை மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் கூறினார்.

காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது-

ஜனாதிபதி புதிய உலகமொன்றை உருவாக்கியுள்ளார். அதன் பலன் யாழ்ப்பாணத்துக்கும் கிடைத்துள்ளது. 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது எந்த ஒரு அரச தலைவருக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது. 3 தினங்கள் அங்கிருந்த ஜனாதிபதியை சமாதானத்தின் தந்தையாக மக்கள் வரவேற்றனர்.

நான் ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாஸா. ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளேன்.

24 ஆயிரம் மக்களை ஓரிடத்தில் திரட்டி சகலருக்கும் காணி உறுதி வழங்கப்பட்டது.

புலிகள் பறித்த சகல தங்க நகைகளையும் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் வட பகுதி மக்கள் அனைத்தையும் இழந்தனர். அவற்றை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈழக்கோசம் எழுப்பிய த. தே. கூ. இங்கு வேறு விதமாக பேசுகிறது.

18 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் மீள வழங்கியுள்ளது.

டயஸ் போராவிற்காக பேசும் த. தே. கூ. இவற்றை மறைக்கிறது.

பொது தேவைக்காக என முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் பெற்ற காணிகளுக்கு என்ன நடந்தது? அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் செய்த காட்டிக் கொடுப்பு கரும்புள்ளியாக பதிகிறது.

4 comments:

  1. எத்தனைகாலம்தான் மனச்சாட்சிய கொன்று, நம்மை நாமே ஏமாற்றி வாழ்வது.

    சிலருக்கு இது சர்வ சாதாரணமாகிவிட்டது.

    மதிப்பிற்குரிய அஸ்வர் அவர்களே!! உங்களுக்கு நீங்கள் பேசுவது நன்றாகத்தான் தெரிகின்றதோ என்னவோ, ஆனால் உங்களைத்தவிர எல்லோரும் நீங்கள் முகஸ்துதி பாடுவதாகவே தாராளமாக புரியுமளவிற்கு உள்ளது இது சற்று உம்மில் உள்ள மதிப்பிற்கு குறைபாட்டை கொண்டுவருகின்றது.

    ReplyDelete
  2. good boy MR family member

    ReplyDelete
  3. மூளை நன்றாகவே பழுதாகியுள்ள இரண்டு பேரின் செய்திகளையும் அடுத்தடுத்து வெளியிட்டது நகைச் சுவைக்காகவா? இரண்டு பேரும் உளறுவதும், சிறு பிள்ளைத் தனமாக செய்திகளை வெளியிடுவதும் அவர்களின் வயோதிபத்தையும், வயது முதிர்வையும் தெளிவுபடுத்துகின்றன. அவர்களின் ஜோக் செய்திகளையும் இடையிடையே வெளியிட்டால் தானே செய்திகளை வாசிப்பவர்களுக்கும் கொஞ்சம் உட்சாகமாக இருக்குமே. நல்லது தொடருங்கள். பாராளுமன்றப் பக்கமே தலை காட்டாது வீட்டில் உட்கார்ந்து பேரப்பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடும் நாள் மிக சமீபத்தில் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.