Header Ads



பொதுபலசேனாவை பயன்படுத்தி, இலங்கை முஸ்லிம்களிடம் ஊடுருவும் பாகிஸ்தானின் ISI...?

-GTN-

பொதுபலசேனாவை பயன்படுத்தி இலங்கையில் முஸ்லீம்கள் மத்தியில் ஆழமாக காலூன்றும் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தென்னிந்தியாவில் செயற்படுவதற்கான ஆட்களை திரட்டுவதாக இந்தியாவின் இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது .

அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளப்பட்டுள்ள விடயங்கள் குறித்த  தமிழாக்கம்.

இலங்கையில் பொதுபலசேனனாவின் தோற்றம் என்பது மிக முக்கியமான விடயம், பௌத்தர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் இலக்கு வைப்பதே,

இந்த அமைப்பின் தோற்றம் என்பது பாகிஸ்தானின் புலானாய்வு அமைப்பான ஐ.எஸ்;.ஐ யை பொறுத்தவரை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த அமைப்பு இலங்கையில் கால்பதிப்பதற்க்கு பல வருடங்களாக முயற்சிசெய்தது எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இதற்க்கு விடுதலைப்புலிகளின் பலமும் ஒரு காரணம். அந்த அமைப்பு வெளிநாட்டவர்களை ஒருபோதும் இலங்கைக்குள் காலடி எடுத்துவகை;க அனுமதிக்கவில்லை.

மேலும் இலங்கை முஸ்லீம்களுக்கும் புலாய்வு அமைப்புகளுக்குமிடையே தொடர்புகள் இல்லாமலிருந்ததும் ஒரு காரணம்.

ஐ.எஸ்.ஐ இன் திட்டம் மிக சுலபமானது- இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பாதுகாப்பின்மையை உருவாக்குவது. இதன் மூலமாக அவர்கள் பாதுகாப்பை தேட வைப்பது. பாக்கிஸ்தான் மறைமுகமாக பொது பலசசேனாவிற்க்கு நிதிவழங்கும், இதனால் முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியம் அதிகரிக்கும், இதன் பின்னர் முஸ்லீம்கள் பாதுகாப்பிற்காக ஐ.எஸ்.ஐ போன்ற அமைப்புகளை நாடுவார்கள்.

பொதுபலசேனா முக்கியத்துவம் பெற தொடங்கிய பின்னரே ஐ.எஸ்.ஐ இன் கொழும்புத் திட்டம் வளர்ச்சியடையத் தொடங்கியது. பொதுபலசேனா முஸ்லீம்கள் மீதான தனது சீற்றத்தை வன்முறைதாக்குதல்கள் மூலமாக வெளிப்படுத்தியது. முஸ்லீம்களின் கடைகளை புறக்கணிக்க கோரியது. ஹலால் உணவுகள் மீது தடைவிதித்தது.

பாக்கிஸ்தானின் புலாய்வு பிரிவு இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது.

பாக்கிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சுபைர் சித்திக் தலைமையில் பாக்கிஸ்தான் உளவுப்பிரிவு தனது திட்டத்தை செயற்படுத்த தொடங்கியது. இலங்கையில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தனது நபர்கள் சுதந்திரமாக செயற்பட அவர் அனுமதிவழங்கினார்.

அவர்கள் முஸ்லீம்களின் பாதுகாப்பு மற்றும் பொதுபலசேனாவின் அத்துமீறல்கள் குறித்து பேசினார்.

அதன் பின்னர் ஒருவருட காலத்திற்க்குள் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு 50 பேரை சேர்த்துள்ளது.

தென்இந்தியாவை இலக்கு வைத்துச்செயற்படுவதற்காக அவர்களுக்கு கொழும்பில் வலுவான வலையமைப்பு தேவையாகவுள்ளது. அருண் கைது அவர்களது தென்னிந்திய தந்திரோபாயத்தை புலப்படுத்துகின்றது என்கின்றன இந்திய புலனாய்வு வட்டாரங்கள்.

பாக்கிஸ்தான் புலனாய்வு அமைப்பு தென்னிந்தியா குறித்து முடிந்தளவிற்க்கு தகவல்களை சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தென்னிந்தியாவில் தாக்குதல் என்ற பாரிய திட்டம் காணப்படும் அதேவேளை இந்த குழுக்கள் நம்பகத்தன்மை மிக்க நபர்களையும்,போக்குவரத்து பாதைகளையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பிற்க்கும் கோடிக்கரைக்குமிடையே நம்பகத்தன்மை மிகுந்த வலையமைப்பை உருவாக்கி அதன்மூலமாக ஆயுதங்களையும்,உறுப்பினர்களையும் கொண்டுவருவதற்க்கு முயல்கின்றர் என்றும் இந்திய புலனாய்வு வட்டாரங்கள் குறிப்பிட்டன.

கோடிக்கரையே பாக்கிஸ்தான் உளவுப்பிரிவிற்க்கு சுலபமானது இப்பகுதியில் பாதுகாப்பு என்பது பலவீனமாகவுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.