Header Ads



அரசாங்கத்திலிருந்து என்னை வெளியேற்ற சூழ்ச்சி - அமைச்சர் ராஜித

ஆளும் கட்சியிலிருந்து தம்மை வெளியேற்ற சிலர் சூழ்ச்சி செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுனில் பிரேமசிங்கவினால் எழுதப்பட்ட சதஹஸ் செவனலி என்ற நூல் வெளியீட்டு விழாவில் அண்மையில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முயற்சிகள் வெற்றியளிக்காது. நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லப் போவதில்லை.

சிங்கள கடும்போக்காளர்கள் தேசத்துரோகி என குண்டு வீசினாலும், தமிழ் கடும்போக்காளர்கள் தேசப்பற்றாளர் என குண்டு வீசினாலும் நான் யார் என்பது எனக்கே இன்னும் தெரியாது.

எதற்காகவேனும் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்றால் ஜனாதிபதி மாளிகையிலேயே எதிர்ப்பை வெளியிடுவேன். வெளியே வந்து எதிர்ப்பை வெளியிட மாட்டேன்.

முழுச் சமூகமுமே சீரழிந்துள்ள நிலையில். அரசியல்துறை மட்டும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது ஊழல் பேர் வழியாக அடையாளப்படுத்தப்படுவது பொதுவானதே.

எடுக்க வேண்டிய எந்தவொரு தீர்மானத்தையும் வெளியில் இருந்து எடுக்கப் போவதில்லை. எல்லாத் தீர்மானங்களையும் அரசாங்கத்திற்கு உள்ளிருந்தே எடுப்பேன். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.