Header Ads



நாட்டில் 5 வருடங்களில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லை - பீரிஸ்

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

நாளாந்தம் ஒவ்வொரு வன்முறைகள் நடைபெற்று வந்த நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் எந்தவொரு பகுதியிலும் இல்லாத வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் ஒரு வன்முறைகூட இடம்பெறவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமன்றி இதுவரை எந்தவொரு வன்முறையும் இடம்பெறுவதற்கு அனுமதிக்கவில்லையென்பது பாரியதொரு அடைவாகும். 

கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி முன்னேறும் அதேநேரம், அரசியல் ஸ்திரத்தன்மையொன்றை ஏற்படு த்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் அப்பால் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்லோவேனியா குடியரசின் பிளெட் நகரில் நடைபெற்ற பிளெட் மூலோபாய பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. கண்ணில்லாத கபோதியா இந்த மனுசன். என்னதான் புரொபெசரா இருந்தாலும் ஒன்னோட சொந்த புத்திக்கு பேச முடியாத நிலை இது உனக்கு சாபமானதொரு வாழ்க்கை இப்படியொரு அரசியல் வாழ்க்கையில் அடிமையாக வாழ்வைதவிட மார்கட்டில் மரக்கறியோ கருவாடோ வித்து தான் நினைத்ததை பேசி வாழ்க்கையை அனுபவித்து சந்தோசமாக வாழலாம்.

    கேவலமான பொட்டைப்பொழப்பு தேவைதானா.

    ReplyDelete
  2. பாவம் இந்த மனுஷன், 5 வருசமா எப்பிடி தூக்கி இருந்திருக்கிறார்.. ! ஒருவேளை கோமா ஆக இருக்குமோ..??
    நிறைய பேர் இப்ப அப்பிடித்தான் இருகிறாங்க..!!

    ReplyDelete
  3. அட! பேராசிரியரும் ஜோக்கராகி விட்டாரா..?

    அதற்காக வருடத்தின் பெஸ்ட் ஜோக்கை செப்டம்பரிலேயேவா அடிப்பது..?

    ReplyDelete

Powered by Blogger.