Header Ads



வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை அமைந்துள்ளது.

இந்த எரிமலையின் மீது ஏறி மலையேற்றக் குழுவினர் அவ்வப்போது பயிற்சி பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது. நேற்று முந்தினம் காலை சுமார் 250 பேர் இந்த மலையின் மீது ஏறி பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ஓண்டாகே எரிமலை வெடித்துச் சிதறியது. இதன் விளைவாக வெளிப்பட்ட தீயின் பிழம்புகளும், சாம்பல் மேகங்களும் அம்மலையின் தென்பகுதியில் மூன்று கி.மீ தொலைவு வரை பரவின. 

எரிமலையின் மேற்பரப்பில் இருந்து வெளியான சாம்பல் திட்டுகள் மேகங்களில் கலந்து, அப்பகுதி முழுவதையும் இருளில் ஆழ்த்தியது. இதனால், அந்த மலையின் சரிவுப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களது சொந்த முயற்சியில் மலையை விட்டு மெல்ல இறங்கி, தரைப்பகுதியை வந்தடைந்தனர்.

எரிமலையில் இருந்து வெளியான வெப்பம் கலந்த சாம்பல் தாக்கி மூச்சுத்திணறி மயங்கிக் கிடந்த 30 பிரேதங்களை மீட்புப் படையினர் நேற்று கண்டெடுத்தனர். இன்று மேலும் 6 பிரேதங்கள் கிடைத்ததையடுத்து பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

சாம்பலுக்குள் புதைந்து காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், மலையின் மேல்பகுதியில் சுழன்றடிக்கும் காற்றில் கலந்து, பறந்து வரும் சாம்பலில் இருந்து ஒருவித நச்சுவாயுவும் கலந்துள்ளதால் மீட்புப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.