Header Ads



ஜனாதிபதி மஹிந்தவிற்கு தனது நண்பர்களால் ஆபத்து..!

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரிகளை விட நண்பர்களே பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

இந்தியாவுக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்திய பிரதமர் வரவேற்ற விதம் மற்றும் அந்தக் கூட்டமைப்புடன் அவர் நடத்திய நெருக்கமான பேச்சுகள் என்பன தொடர்பிலேயே ஆங்கில இதழ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பின் போது செயற்பட்ட விதம் குறித்து இலங்கை பெருமிதம் அடைந்தது.

இதன் காரணமாக இந்தியாவும் புதிய அரசாங்கமும் கூட தம்முடன் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைத்தது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தற்போது கொண்டுள்ள நெருக்கம், அயல்நாடுகள் எல்லாமே தம்முடன் உள்ளதாக மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு பாதிப்பை கொண்டு வந்துள்ளது.

இதற்கு காரணம் உரிய இராஜதந்திர முனைப்புக்கள் இன்மையாகும்.

பிழையான ஆட்களை ராஜபக்ச அரசாங்கம் சரியான இடங்களில் நியமித்துள்ளமை காரணமாகவே இலங்கை அரசாங்கம் இராஜதந்திர பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இதன் கட்டமாகவே, பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளனெ. ஐரோப்பிய நாடுகளுடனும் பிரச்சினைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.

இவையாவும் ஜனாதிபதியின் நண்பர்களால் அரசாங்கத்துக்கு நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய பாதிப்புக்களாகும் என்று ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. இருக்கலாம் அதைவிடவும் உமது சகோதரராலேதான் பேராபத்து.

    ReplyDelete

Powered by Blogger.