Header Ads



பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையும் பரிந்துரையில் ஹமாஸ் கைச்சாத்து

இஸ்ரேல் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சாத்தியம் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பலஸ்தீனம் இணைவதற்கான பரிந்துரையில் ஹமாஸ் கைச்சாத்திட்டதாக அந்த அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

"பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைய வழிவகுக்கும் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அனைத்து பலஸ்தீன தரப்பினரது ஒத்துழைப்பைக் கோரி விடுத்த நிபந்தனைக்கு இணங்க ஹமாஸ் தமது ஆதரவை வெளியிட்டு கைச்சாத்திட்டது" என்று ஹமாஸ் துணைத்தலைவர் மூஸா அபு+ மர்சூக் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மி'hல் மற்றும் மஹ்மூத் அப்பாஸ{க்கு இடையில் காட்டாரில் சந்திப்பு இடம்பெற்று இரு தினங்களிலேயே ஹமாஸின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது இந்த பரிந்துரையில் காசாவில் இரண்டாவது மிகப்பெரிய சக்தியாக இருக்கும் இஸ்லாமிய ஜpஹாத் போராளிகள் மாத்திரமே கைச்சாத்திடவில்லை என்று பலஸ்தீன சிரேஷ்ட சமரச பேச்சுவார்த்தையாளரான சயீட் எரகத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் இதில் கைச்சாத்திடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "ஐ.சி.சியில் இணைவதற்கு ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் ஜனாதிபதி அப்பாஸை இந்த பரிந்துரை கோருகிறது. இந்த பரிந்துரையில் கைச்சாத்திடும் அனைத்து தரப்பும் ஐ.சி.சி. உறுப்புரிமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்" என்று எரகத் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் ஐ.சி.சியில் கைச்சாத்திட்டபோதும் ரோம் உடன்படிக்கையை அது ஏற்கவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றங்கள் உட்பட மோசமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரிக்க ஹேகை அடிப்படையாகக் கொண்ட ஐ.சி.சி. கடந்த 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஜ{லை தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதலில் 2000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஐ.சி.சியில் இணைவதன் மூலம் பலஸ்தீனத்தால் இஸ்ரேல் மீது குற்றம் சுமத்த வாய்ப்பு ஏற்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டிலும் இஸ்ரேலின் யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பலஸ்தீனம் ஐ.சி.சியின் வழக்கறிஞர் அலுவலகத்திடம் கோரியிருந்தது. எனினும் அது ஐ.சி.சியின் அங்கத்துவம் பெறாத நிலையில் அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் கடந்த 2012 நவம்பரில் பலஸ்தீனம் ஐ.நாவின் கண்காணிப்பாளர் அந்தஸ்த்தை பெற்றதன் மூலம் அது ஐ.சி.சியின் விசாரணக்கு வழி பெற்றுக்கொண்டது.

No comments

Powered by Blogger.