Header Ads



அமெரிக்காவின் இரகசிய அதிவேக ஆயுத பரிசோதனை முயற்சி தோல்வி

அமெரிக்க இராணுவம் தயாரித்துவரும் இரகசிய அதிவேக ஆயுதம், பரிசோதனை முயற்சியின்போது கோளாறு அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஒரு சில வினாடிகளில் வெடிக்கச் செய்யப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்ட கன் குறிப்பிட்டுள்ளது.

உலகின் எந்த பாகத்தையும் ஒரு மணி நேரத் திற்குள் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழே இந்த ஆயுதம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனை முயற்சியின்போது கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்ப ட்டதை அடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருதி உடனடியாக வெடிக்கச் செய்து அழிக்கப்பட் டுள்ளது. இதனால் எவருக்கும் காயம் ஏற்பட வில்லை என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

அலஸ்காவில் இருக்கும் காடியக் ஏவுதளத்தில் இருந்து நேற்று முன்தினம் ஏவப்பட்ட இந்த ஆயு தம் வெடித்ததால் ஏவுதளத்திற்கு சேதம் ஏற்பட்டி ருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனா கடந்த ஜனவரியில் அதிவேக ஆயுத முறையை பரிசோதனை செய்த நிலையில் ஆயுதப் போட்டியாகவே அமெரிக்காவும் அதிவேக ஆயுத முறையை மேம்படுத்தி வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.