Header Ads



சிங்கள பௌத்தர்களின் வாக்குகளுக்கு பாதிப்பு வராலாம் - ஜனாதிபதி

அமைச்சர்கள் அறிவற்ற விதத்தில் செயற்படுவதால் தேர்தல் காலத்தில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளுக்கு பாதிப்பு வராலாம் எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். 

மத அமைப்புகளுடன் மோதுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் அமைச்சர் ராஜிதசேனரத்ன தலைமையிலான குழுவினர்  அஸ்கிரிய மாகாநாயக்கரை சந்தித்து பொதுபலசேனா குறித்து முறையிட்டதன் பின்னரே ஜனாதிபதியின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் தேரரை சந்தித்த அமைச்சர்கள் அது குறித்து கட்சிக்கு அறிவிக்கவில்லையென முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில் குறுக்கிட்ட அமைச்சர் ராஜித தங்களது சந்திப்பின் நோக்கம் பகிரங்கமானது, என தெரிவித்த வேளை அதற்கு கடுமையாக பதிலளித்த ஜனாதிபதி தனக்கு என்ன நடைபெறுகிறது என்பது தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அறிவற்ற விதத்தில் செயற்படுவதால் தேர்தல் காலத்தில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளுக்கு பாதிப்பு வராலாம் எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். gtn

1 comment:

  1. அமைச்சர்களை அறிவற்றவர்கள் என்று சொல்லுவது எந்த வகையில் நாகரீகமான செயல். இதை வைத்து இவரது தராதரத்தை கணக்கிடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.