Header Ads



''ஊவா தேர்தல்: முஸ்லிம் பிரதிநித்துவம் என்பததைவிட சமூகத்தின் நலன்களே காலத்தின் தேவை''

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற ஊவாவில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் பிரதிநித்துவம் பற்றிப் பேசுகின்ற போது, கடந்த காலங்களில் ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதத்துவம் எவ்வாறு இருந்து வந்துள்ளது என்பதைப் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முதலாவது மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி பகிஸ்கரித்ததனால்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு பிரதிந்தித்துவம் ஊவாவில் கிடைத்தது.

அதன் பின்னர் நடைபெற்ற தோதர்ல்களில் அவ்வப்போது முஸ்லிம் பிரதிநித்துவங்கள் அபூர்வமாகக் கிடைத்தாலும் நிரந்தரமாக ஊவாவில் முஸ்லிம் பிரதிநித்துவம் என்பது ஏட்டுச் சுரக்காய் என்ற நிலையில் தான் இருக்கின்றது. இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்தோ அல்லது, கடிதத் தலைப்புக்களை மட்டும் வைத்துக் கொண்டு அமைப்பு நடாத்துவோர்களுடனோ  கூட்டமைத்து இந்தத் தேர்தலில் நிற்பதால் அபூர்வமாக ஏதேனும் பெரும்பான்மைக் கட்சிகளிலிருந்து கிடைக்கக்கூடிய முஸ்லிம் பிரதிநித்துவத்தையும் அது இழக்கச் செய்து விடும். எனவே முஸ்லிம் பிதிநித்துவம் என்ற கோசமே முஸ்லிம் பிரதிநிதத்துவத்தையும் இல்லாமலும் செய்வது விடும். 

பின்வரும் புள்ளிவிபரங்களில் இருந்து ஊவாவில் முஸ்லிம் பிரதிநித்துவம் எவ்வாறு சாத்தியப்படும் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரு வேட்பாளரை ஊவாவில் வென்றெடுப்பதற்கு குறைந்தது 17000ம் வாக்குகள் தேவைப்படும். எனவே வெற்றிலை, யானை, மரம், இதர என்று முஸ்லிம்கள் ஊவாவில் தமது பிரதிநித்துவத்திற்குப் போட்டி போடுகின்ற நிலைதான் இந்த முறை இருக்கும்.
  
வருகின்ற தேர்தலில்  மொனராகலைக்கு 14 ஆசனங்கள். பதுள்ளைக்கு 18 ஆசனங்கள். போனஸ் ஆசனங்கள் 2. 

ஊவாவிலுள்ள வாக்களர்கள் நிலை

பதுள்ளை மாவட்டம் 2014
பதுள்ளை மாவட்ட மொத்த வாக்காளர்கள் 600966
பதுள்ளை மாவட்ட மொத்த முஸ்லிம் வாக்காளர்கள் 31867


மொனரகலை மாவட்ட 2014
மொனராகலை மாவட்ட மொத்த வாக்காளர்கள் 332764
மொனரகலை மாவட்ட மொத்த முஸ்லிம் வாக்காளர்கள் 7320

எனவே தற்போது நாட்டிலுள்ள அரசியல் நிலை மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநித்துவம் பற்றி பேசியவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் அழிவுகள் நடந்த நேரத்தில் கையாளாகாதவர்களாக இருந்து விட்டு அதற்கு பின்னர் நியாயங்களை சொல்லித்திரிவதை நாம் அளுத்கம பேருவளை வன்முறையில் பார்க்க முடிந்தது. எனவே முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தரவதாகக் கூறிவாக்குக் கேட்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது முஸ்லிம்கள் சாலைப் போராட்டங்களில் இறங்குமாறு அழைப்புவிடுவது இவர்களின் கையாளாகதனம் என்பதனை இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த நாட்டு முஸ்லிம்களுக்குத் தலைமைத்துவம் கொடுக்க தாம் தகுதி இல்லாதவர்கள் என்ற செய்தியையே அவர்கள் எமக்குச் சொல்லி இருக்கின்றார்கள்.  

எனவே ஊவாத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் தெரிவு ஆளும் தரப்பாகவோ அல்லது ஜேவிபியாகவே இருக்க முடியும். நாம் ஏன் இப்படிப் கூறுகின்றோம் என்றால் இன வன்முறையாளர்கள் ஊவாவில் எப்படியாவது  வன்முறையொன்றை உருவாக்க கடும் முயற்ச்சிகளை மேற் கொண்ட போது அதற்கு எதிராக் குரல் கொடுத்தது மட்டுமல்லாது உரிய நடவடிக்கைகளையும் மேற் கொண்டு முஸ்லிம்களைப் பாதுகாத்த முக்கிய தலைவர்கள்  பலர் ஊவாவில் ஆளும் தரப்பில் இருந்தனர். 

இவர்களில் டிலான் பெரேரா, நிமல் சிரிபால டி சில்லவா, முக்கியமானவர்கள். அத்துடன் இந்தத் தேர்தலில் ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறப் போவதில்லை என்பது மிகத் தெளிவு. எனவே தோற்றுப் போகின்ற ஒரு கட்சிக்ககு வாக்களித்து ஏமாறுவதை விட முஸ்லிம் சமூக நலன்களில் அக்கறை காட்டும் ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் கரங்களை முஸ்லிம்கள் ஊவாவில் பலப்படுத்த வேண்டி இருக்கின்றது.

ஆளும் கட்சி முஸ்லிம்கள் விடயத்தில் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம்களிடத்தில் இருக்குமாயின் அவர்களுக்குள்ள அடுத்த தெரிவு முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற் கொண்டுவருகின்ற ஜேவிபியாகவே இருக்க வேண்டும்.

எனவே முஸ்லிம் பிரதிநித்துவம் என்பதனை விட ஊவா முஸ்லிம்களுக்கு மிக முக்கியமானது அவர்களுடைய நலன்களும் பாதுகாப்பும் என்பதுதான். எனவே அதனை வழங்கவோ அதற்ககாக் குரல் கொடுக்கவோ வக்கில்லாதவர்களுக்கு வாக்களிப்பதை விட முஸ்லிம்கள் விடயத்தில் நம்பகத்தன்மையுடன் நடந்து கொண்டவர்களுக்கே முஸ்லிம்கள் இந்தத் தேர்லில் வாக்களிப்பது அவர்களின் தார்மீகக்  கடமையாகும் என்பது யூசிஎன்சி என்ற தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம் இந்தத் தேர்தலில் ஊவா முஸ்லிம்களுக்கு வழங்குகின்ற  தெளிவான ஆலோசனையாகும். 

எல்.ஏ.யூ.எல்.எம்.நளிர்
பொதுச் செயலாளர்
மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம் (UCNC)

2 comments:

  1. Izuthan sariyana murai izanai naan rombave varavetkiren. Summa therzal nerathil mathiram 40 bikla erikondu kodiya aattikondu allahu akbar enru townla kosam pottuttu povazu.unakku radiovilum 5 velai tholuhaiku azaan sollumpozum roadla kodipidithu solli thiriya vendum enru enna avasiyam.indha murai j.v.p. yai sarndhu nippazu nallazu enru enakkum thonuzu. Aana sandhanaiku kodukka vendam. Azuvum illai enral u.n.p. yil yarum muslim uruppinar irundhal avarai aazarikkalaam.allah ellavatrayum shirppaakki tharuvanaha.

    ReplyDelete
  2. நல்ல தொரு அலசல். நன்றி. தயவுசெய்து நீங்கள் கூறும் கட்சியில் (JVP or PA) ஒரு முஸ்லிமாவது தேர்லில் போட்டியிடுவதை உருதிப்படித்திக்கொல்லுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.