Header Ads



பொது பல சேனாவுக்கு பாதுகாப்பளிக்கிறது சிறிலங்கா அரசு – அமெரிக்கா குற்றச்சாட்டு.

சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் பொது பல சேனாவுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், பலமான தொடர்புகள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நேற்று வெளியிட்ட மத சுதந்திரம் தொடர்பான 2013ம் ஆண்டுக்கான உலகளாவிய அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிற மதத்தினர் மீதான வன்முறைகளில் பொது பல சேனா உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு அளிப்பதாகவும், இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

அத்துடன், பௌத்தர்கள் வசிக்காத வடக்கில் சிறிலங்காப் படையினரால், அதிகளவு பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டு வருவது குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

“பெரும்பான்மையின பௌத்தர்களின் அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த 27 ஆண்டுகால மோதல் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் தமிழர்களின் பிரதேசத்தில் அரசுப்படையினர் தொடர்ந்தும் பௌத்த வழிபாட்டு இடங்களை அமைத்து வருகின்றனர். 

இந்த இடங்கள் இந்துக்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள பகுதியாகும். 

கிறிஸ்தவ, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் கூட இவ்வாறு பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்றன. 

முன்னர் விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளில் அரச ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

வடக்கிலுள்ள, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில், கூட பௌத்த வழிபாட்டு தலங்கள் அதிகரித்துள்ளன. 

மத சிறுபான்மையினர் மீதான, பௌத்த தேசியவாத அமைப்புகளின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது. 

பௌத்த பிக்குகள் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றனர்.” என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் இந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. Hurrah, you are the good person and genuine because that's the truth. Defence secretary and the government are giving protection clergy who are doing criminal activities.

    ReplyDelete
  2. Ithuwum oru wahayana.muslimkalai arasankaththudan motha wittu aliwai arppaduththum thanthiramthan naam mihawum kawanamaha irukka wendum. Osama billadinai.uruwaakkiyathum amarikka awarai payankarawaathi entru muththirai kuththiyathum.amarica awarai kolai saithathum amarica .amaricada intha.thalattu eatho oru pin wilaiwu undakalaam..

    ReplyDelete

Powered by Blogger.