Header Ads



காஸா வீதிகளில் ஜனாஸாக்கள்

காசாவில் ஹமாஸ் மீதான தரைவழி இராணுவ நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த 13 தினங்க ளாக இடம்பெறும் மோதலில் தற்போது இஸ்ரேலின் மோசமான  தாக் குதலுக்கு முகம்கொடுத்து வருவதாக காசா குடியிருப்பாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். 

இஸ்ரேல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காசாவில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் மேலதிக படையினர் இணைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

இதில் இஸ்ரேல் படையெடுப்பில் கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் நேற்றைய தினம்வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 40க்கும் அதிக மான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் பல உடல்கள் மீட்கப்படாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண் ணிக்கை 397 ஆக அதிகரித்திருப்பதோடு 3000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் டாங்கிகள் சரமாரியாக தாக்குதல் நடத்துவதால் கிழக்கு காசாவின் 'iஜயா பகுதியில் இருந்து மக்கள் நேற்று காலை முதல் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இங்கு தொடர்ந்தும் தாக்குதல் நீடிப்பதாக குறிப்பிட்டிருக்கும் அங்கிருக்கும் அல் ஜஸீரா செய்தியாளர், மக்கள் காசா நகரை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக விபரித்துள்ளார். இதில் பெரும்பா லான மக்கள் தமது உடைமைகளையும் குழந்தைகளையும் ஏந்தியவாறு கால்நடையாக பயணித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் தாக்குதல்களால் 'iஜயா பகுதியில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 'iஜயாவில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் கலில் அல் ஹையாவின் மகன் ஒசாமா மற்றும் அவரது மனைவி, இரு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இஸ்ரேல்  தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற அம்புலன்ஸ் வண்டிகளை 'iஜயா பகுதிக்கு கொண்டுசெல்லவும் இஸ்ரேல் அனுமதி மறுத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா குறிப்பிட்டுள்ளார்.

"இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் 'iஜயா ஒரு மூடிய வலயம் என்று ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படையினர் செஞ்சிலுவை குழுவை அறிவுறுத்தியுள்ளனர்"என்று அல் கித்ரா குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேல் இராணுவ உத்தரவை மீறி குறித்த பகுதிக்கு பலஸ்தீன அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

"வீதிகளெங்கும் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் இருக்கிறார்கள். எவராலும் அவர்களுக்கு உதவ முடியாதுள்ளது" என்று 'iஜயா நகர குடியிருப்பாளரான அஹமது ரபியா விபரித்துள்ளார்.

இந்நிலையில் 'iஜயா பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்ற தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹாமாஸ் கோரிக்கை விடுத்திருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. ஊடாக இஸ்ரேலிடம் ஹமாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. எனினும் இந்த கோரிக்கை இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்டதாக ஹமாஸ் பின்னர் அறிவித்தது. 

காசாவின் அல் 'pபா மருத்துவமனையில் பணியாற்றும் நோர்வே நாட்டு மருத்துவரான மட்ஸ் கில்பர்ட் பெரும்பாலான பொதுமக்கள் குண்டு காயங்களுடனும் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலை யிலும் கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். "பாரிய அளவான பொதுமக்கள் அதிலும் குழந்தைகள் வருவது கவலையளிக்கிறது. காசாவில் இருக்கும் மக்களின் நெகிழ்ச்சித்தன்மையை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. உறுதியாக இருக்கிறார்கள். இந்த சமூகத்தினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அமைதியாகவும் இணக்கத்துடனும் செயற்படுவதை பார்க்கும்போது நான் புதுமை அடைகிறேன்" என்றார். 

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களால் முன்று மருத்துவர்களின் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப் பிட்டார். "இஸ்ரேல் இவ்வாறு பொதுமக்களை தாக்குவதை உலகம் எவ்வாறு அங்கீகரித்து இருக்க முடியும்? இங்கு எந்த பாதுகாப்பு முகாம்களும் இல்லை. முன் கூட்டிய எச்சரிக்கை அறிவுறுத்தலும் இல்லை. சைரன் ஒலியும் இல்லை. இஸ்ரேலின் இராணுவ பலத்திற்கு முன்னால் இங்குள்ள மக்கள் வெறுமையாகவே உள்ளனர்" என்று அந்த மருத்துவர் விபரித்துள்ளார். 

காசாவில் தற்போது 61,479 பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்திருப்பதாக ஐ.நா.வின் நிவாரண உதவிகளுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மறு புறத்தில் காசாவில் கொல்லப்பட்ட ஐந்தில் ஒருவர் குழந்தைகள் என பிரிட் டனில் இருந்து இயங்கும் சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு குறிப் பிட்டுள்ளது. 

இதனிடையே ஹமாஸ் ஆயுதப்பிரிவினர் கடந்த சனிக்கிழமை இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஐந்து இஸ்ரேல் படையினரை கொன்றுள்ளனர். கிழக்கு ரபாஹ்வில் இருந்து சுரங்கப்பாதை ஊடாக இஸ் ரேலுக்குள் ஊடுருவிய போராளிகள் ஐந்து படையினரை சுட்டுக் கொன்றதாக அல் கஸ்ஸாம் படையணி அறிவித்துள்ளது. இதில் மூவர் மீது நேரடியாக தலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் ஏனையோர் வேறு பகுதி களில் மோசமான துப்பாக்கி காயத்திற்கு இலக்கானதாக அது மேலும் தெரிவித்துள்ளது. பலஸ்தீன போராளிகளுடனான மோதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் இரு தரப்பு மோதலில் இஸ்ரேல் தரப்பில் கொல்லப்பட்டோரது எண்ணிக்கை 7 ஆதிகரித்துள்ளது. இதில் இரு சிவிலியன்களும் அடங்குகின்றனர். 

இஸ்ரேல் தொடர்ச்சியாக காசா மீது 10 தினங்கள் வான் தாக்குதல் நடத்திய நிலையிலும் காசாவில் இருந்து வரும் ரொக்கெட் தாக்குதலை நிறுத்த முடியாத நிலையில் கடந்த வியாழக்கிமை காசா மீது தரைவழி படையெடுப்பை ஆரம்பித்தது. ஹமாஸின் சுரங்கப்பாதைகளை அழிப்பதை இலக்காகக் கொண்டே இந்த தரைவழி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. 

காசாவின் எல்லையோரத்தில் இருக்கும் சுரங்கப்பாதைகளை அழிக்கும் நடவடிக்கையிலேயே இஸ்ரேல் படையினர் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேல் துருப்புகள் ஊடுருவவில்லை. எனினும் இஸ்ரேலின் மீது காசாவிலிருந்து தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை 1700க்கும் அதிகமான ரொக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை ரபாஹ் எல்லை வாயிலூடாக காசாவுக்கு கொண்டு செல்ல அனுபப்பட்ட நிவாரண உதவிகளை தாங்கிய வாகன தொடரணியை எகிப்து படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 11 பஸ் வண்டிகளில் நிவாரண உதவிகளுடன் காசாவுக்கு செல்ல முயன்ற குழுவையே எகிப்து இராணுவம் நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை காசாவுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று எகிப்து இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 

காசாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் எகிப்து, கட்டார், பிரான்ஸ் மற்றும் ஐ.நா.வின் இராஜதந்திர முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லோரன்ட் பபியஸ் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் மோதல் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இணக்கம் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காசா விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய கிழக்குக்கு சென்றிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் பலஸ்தீன நிர்வாக ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ{க்கும் இடையில் நேற்று கட்டாரில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதேபோன்று ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மி'hலுக்கும் மஹ்மூத் அபாஸ{க்கு இடையிலும் நேற்று கட்டாரில் சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை தளர்த்தவும் எகிப்தின் ரபாஹ் எல்லை வாயிலை திறக்கவும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் நிபந்தனை வதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.