Header Ads



இஸ்ரேலியப் பிரதமரே தண்டிக்கப்பட வேண்டியவர் - பாராளுமன்றத்தில் ஹக்கீம் முழக்கம்


யுத்தக்குற்றம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட வேண்டுமென்றால் அது இஸ்ரேலியப் பிரதமர் தான் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் 24-07-2014 பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக சிறுவர் சிறுமியர் உட்பட பலர் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் அல்அக்ஷ்மா மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இது பற்றி பேசப்படுகிறது. எனினும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் அனுசரணையில் இன்று இஸ்ரேல் அடவாடித்தனத்தை செய்து வருகிறது. இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் எமது நாடு அங்கீகரித்துள்ளது. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் நீண்டகாலம் இருந்து வந்துள்ளார்.

என்றாலும் இன்று காசா மீது தொடுக்கப்படும் தாக்குதலை நிறுத்துவதற்கு எந்தவொரு நாடும் முன்வரவில்லை. சிலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். 

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க பல நாடுகள் தயங்குகின்றன. சிலர் பாதுகாக்கின்றனர். 

யுத்தக்குற்றவாளியாக உலகில் தண்டிக்கப்படவேண்டியவர் என்றால் அது இஸ்ரேலியப் பிரதமராகத்தான் இருக்க வேண்டும் என்றார். 

கால விதிப்பு (திருத்த) சட்டம் தொடர் பான விவாதத்திற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

3 comments:

  1. Shaa... enna oru weham izuthan nam thalaivar. Singam seeriduchi masha Allah. Aanal aluthgama visayam pathi parlimentla vaaye therakkamatomla.miyaaaaw

    ReplyDelete
  2. தலைவரே,
    அளுத்கம தாக்குதலுக்கு எந்தவொரு காத்திரமான அழுத்தத்தையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், இதற்கு காரமானவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்கப்படாமலும் உள்ள அரசாங்கத்தின் அமைச்சராக ( முஸ்லிம் சமுகத்தின் தன்மானம் இழந்து ) இருந்து கொண்டு இருக்கும் நீங்கள் எப்படி சிலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனர் என்று கூர முடியும்..??????

    அங்குள்ள மக்கள் தங்களது மெளத்தை பிற்படுத்த விரும்பாமல் தங்களது நிபந்தனைகல் நிறைவேறும் வரை போராடுகிறார்கள். நீங்களோ குறைந்தது அமைச்சு பதவிக்காக..?????????

    இருந்தாலும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக பலஸ்தீன் மக்களுக்காக பாராளு மன்றத்தில் பேசியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

    ReplyDelete
  3. Hon minister, you meant that crimes against Muslims and their religious faith in Sri Lanka by MR brothers, is not enough to try them before UN commission of inquiry ? is this your position ?

    ReplyDelete

Powered by Blogger.