Header Ads



காஸாவில் ஷஹீத்தானவர்களின் எண்ணிக்கை 580 ஆக உயர்வு


இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ க்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைவழி தாக்குதல்களையும் தொடங்கியது. இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று நடந்த குண்டு வீச்சு மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 54 பேர் பலியாகினர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு சாவு எண்ணிக்கை 580 ஆக உயர்ந்துள்ளது.

ரபா, டெர்அல்–பலா ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல்–காஸாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் பாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் பேசியுள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் சமரச பேச்சு வார்த்தை நடத்த எகிப்து தலைநகர் கொய்ரோ புறப்பட்டு சென்றுள்ளார்.

போர் தொடர்ந்து உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி ஏற்படுத்த அமெரிக்காவும், ஐ.நா.சபைையும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

No comments

Powered by Blogger.